30 December 2009

கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை- சட்டமா அதிபர்

வழக்குகள் எதுவுமின்றிச் குறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக் கும் தமிழ்க் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவதற்கான விசேட நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்தார்.

வழக்குத் தொடரவேண்டிய அவசியம் இல்லாதவர்கள் நேரடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் இதுபற்றி பதினொரு சட்டத்தரணிகள் ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்ட சட்டமா அதிபர் இக் கைதிகளின் விடுதலை அடுத்தமாத முற்பகுதியில் இடம்பெறுமென நம்பிக்கைத் தெரிவித்தார்

அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றின் கீழ் கைது செய்யப்பட்ட வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 600 தமிழ்க் கைதிகள் வருடக்கணக்காக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கமைய விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பற்றிய முக்கிய அறிவிப்பு இந்த வாரம் வெளியாகுமென தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில், கடந்த வாரம் நீதித்துறை அதிகாரிகள் மட்டத்தில் ஆராயப்பட்டதுடன், விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் சுகத கம்லத் தெரிவித்தார்.

வழக்குகள் தொடரப்படாத நிலையில் களுத்துறை, மகசின், வெலிக்கடை, பூஸா உள்ளிட்ட சிறைகளில் தமிழ்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருந்ததோடு ஜனாதிபதியிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அதேவேளை, இறுதி யுத்தத்தின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 738 பேரை இவ்வாரம் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர் முகாம்களில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுள் 700 பேரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினால் விசாரணை செய்யப்படு பவர்களுள் 38 பேரும் இவ்வாரம் விடுதலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment