07 January 2010

சரணடைந்த புலி உறுப்பினர்கள் 1000 பேர் விடுதலை- ஏ-9 பாதை 24 மணிநேரமும் திறப்பு

யுத்த காலத்தில் படையினரிடம் சரணடைந்தபின் 12,000 பேர் புனர்வாழ்வு நிலையங்கனில் வைக்கப்பட்டுள்ள 12000 பேரில் 1000 பேர் எதிர்வரும் 09ம் திகதி விடுதலை செய்யப்படுவர் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் முதற்கட்டமாக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றே 1000 பேர் விடுதலை செய்யப்படுவதாக தெரிவித்த பசில் ராஜபக்ஷ அவர்கள் ஏனையவர்களைப் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

இது தவிர ஏ-9 பாதை தினமும் 24 மணிநேரமும் திறக்கப்பட்டுள்ளதாகவும் எந் நேரத்திலும் பயணம் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment