27 April 2011

பான் கீ மூனும் ஐ.நா சபையுடனான இலங்கையின் உறவும்


இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள மிகவும் ஒரு இக்கட்டான நிலைமையை நன்கு பரிசிலித்த பின் அவசர அவசரமாக தயாரிக்கப்பட்ட அறிக்கையோடு பத்திரிகை காரியாலயத்துக்குச் விரைந்து செல்லாது விடுதலைப் புலிகள் 2009 மே மாதம் தோற்கடிக்கப்பட்டதிலிந்து காத்துவந்த எனது மௌனத்தை கலைத்து விட்டு இக் கடிதத்தை தங்களுக்கு வரைகின்றேன். தற்போது ஏற்பட்டுள்ள இச் சச்சரவில் கலந்து கொண்டு மேலும் இந் நிலைமையை; மோசமடையச் செய்யாதுஇ மாறாக எவ்வவாறு அதனை சீர் செய்ய முடியும் என பார்ப்பதே எனது நோக்கமாகும். தங்களுக்கு எந்த விடயத்திலும் ஆலோசனை வழங்கும் முதுமை எனக்குண்டு என எண்ணுகின்றேன். விரைவிலோ அன்றிக் காலதாமதமாகவோ ஏற்படவுள்ள பெரும் அனர்த்தத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற எனது இந்த ஆலோசனைகளை கவனத்தில் எடுப்பீர்கள் என நம்புகின்றேன். நான் நேசிக்கும் எனது நாட்டுக்கும் அதில் வாழும் மக்களுக்குமாக எனது கடமையை செய்யும் பணியில் இறங்குகின்றேன்.

இச்சந்தர்ப்பத்தில் எனது விசுவாசமான ஆலோசனையை ஏற்று முதலாவதாக நாடுமுழுவதிலும் கண்டபடி ஆர்ப்பாட்டங்களோ அன்றி எவ்விதமானவெரு எதிர்ப்புக்களையும் முன்னின்று நடத்த எவரையும் அனுமதித்து நிலைமையை மேலும் மோசமடைய செய்யவேண்டாம் என்றும் பான் கீ மூன்னின் ஆலோசகர்கள் சமர்ப்பித்த அறிக்கையை வெளியிட அனுமதித்து அதனை எதிர்நோக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளுகின்றேன்.பிறரால் தூண்டப்படும் விளைவுகளைப்பற்றி அறிந்திராத சாதாரண மக்கள் எல்லை மீறி செயற்பட்டு பெரும் நட்டத்தை ஏற்படுத்தலாம். ஐக்கிய நாடுகள் சபை கூட அறிக்கையை வெளியிடாது விட்டாலும் அவ்வறிக்கை எப்படியோ பத்திரிகைகளை போய்ச்சேரும். அப்பட்சத்தில் எதிர்பார்க்கும் விளைவுகளுக்கு மாறாகவே அமையும்.




No comments:

Post a Comment