10 April 2011


மாவிலாறு இன்று: போரின் நிழல்கள்


அந்தக் கடையின் வாசலில் தொங்கிக் கொண்டிருந்த “மாவிலாறு கபே” என எழுதப் பட்டிருந்த பெயர்ப் பலகை என் கண்களை ஈர்த்தது. அந்த உணவகம் மிகவும் சுத்தமாக இருந்ததுடன் உணவும் ஓரளவு தரமாக இருந்தது. ஆனால் உண்மையில் அந்தப் பிரதேசத்தைப் பற்றி எழுதுவதற்கு எந்த விடயமும் அங்கு இருக்கவில்லை. எப்படியாயினும் மாவிலாறு கபேயில் உணவு உண்டது ஏதோ ஒரு உணர்வினை ஏற்படுத்தியது …அதற்கான காரணங்கள் உணவைத் தவிர்ந்த வேறு சிலதாக இருந்தன.

ஒரு நடுத்தர வயதுத் தம்பதிகளால் அந்த உணவகம் நிர்வகிக்கப் பட்டு வந்தது. பெண்மணி சமையல் வேலைகளைக் கவனிக்க, அவர் கணவர் சுத்தப் படுத்துதல், பரிமாறுதல் உணவுத் தேவைகளை ஏற்றுக் கொள்ளுதல் போன்ற மற்றைய சகல வேலைகளையும் கவனித்து வருகிறார். ”மாவிலாறு சமீபத்தில்தான் உள்ளதா?” யாரோ கேட்டார்கள்.” மரங்கள் அடர்ந்த ஒரு மேட்டின் மீதுள்ள ஒரு வீட்டினைச் சுட்டிக் காண்பித்தபடி “அதோ அதற்கு அப்பால்தான் உள்ளது” என்று ஏதோ சிறிய நடைத்தூரத்தில் உள்ளது என்கிற கருத்தில் உணவக உரிமையாளர் பதிலளித்தார். அது அவ்வளவு கிட்டிய தூரத்தில் இல்லை என அங்கு போய்வந்த ஒருவர் எங்களிடம் தெரிவித்தார். உணவக உரிமையாளர் முகத்தைச் சுருக்கியபடி தனது வியாபார வேலைகளைக் கவனிக்கப் போய் விட்டார்.

மாவிலாறு உணவகத்தில் உணவு உண்டது ஒரு அதீத கற்பனையான நிகழ்வினைப் போலத் தோன்றியது. இப்போது நாங்கள் பொரித்த மீன்துண்டுடன் சிவப்பரிசிச் சோற்றை சுவைத்து மகிழும் இதே இடத்தில்தான் ஐந்து வருடங்களுக்கு முன்பு எறிகணைகள் மூலம் வாத்து வேட்டை நடந்து கொண்டிருந்தது.


No comments:

Post a Comment