17 October 2011

பல்கலைகழக மாணவர் அவைத்தலைவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்- தி. ஸ்ரீதரன், பொதுச்செயலாளர் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்


யாழ் பல்கலைகழக மாணவர் அவைத்தலைவர் தவபாலசிங்கம் மீது கந்தர்மடத்தில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமாக தாக்குதலை பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

யுத்தம் முடிந்து இரண்டு வருடங்களாகியும் இத்தகைய தாக்குதல்கள் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், பல்கலைகழக மாணவர்கள் மீது அடிக்கடி நடைபெறுகின்றன. மக்கள் பீதி நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். நாவாந்துறை தாக்குதல், உதயன் பத்திரிகையாளர் மீதான தாக்குதல் இப்போது பல்கலைகழக மாணவர் தலைவர் மீதான தாக்குதல் என்பன வடக்கு கிழக்கில் ஜனநாயக இடைவெளி இல்லாதொழிக்கப்பட்டு வருவதையே காட்டுகிறது.

இந்த அச்சுறுத்தல்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஜனநாயகம், மனித உரிமை சட்டத்தின் ஆட்சி என்பவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

பல்கலைகழகத்தின் சுயாதீனம் மாணவர் ஆசிரியர்களின் உரிமைகள் என்பன பாதுகாக்கப்பட வேண்டும்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சுயாதீனமான நீதி விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் பகிரங்கப்படுத்தப்படுவதும் தண்டனை வழங்குவதும் முன்னுரிமை பெறுகின்றன.

இத்தகைய அச்சுறுத்தல்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

No comments:

Post a Comment