மன்னாரில் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்படும் எலும்புக் கூடுகள் குறித்து ஐ.நா. உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கருத்து வெளியிடுகையில் போரின்போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களே இவ்வாறு எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
போர்க் காலத்தின் போது படையினரிடம் மக்கள் சரணடைந்தார்கள். அதேபோல், அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் தலைமையில் பலர் படையினரிடம் சரணடைந்தனர். ஆனால், இன்னமும் இவர்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை. ஆகவே, மன்னாரில் தற்போது மீட்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் சடலங்கள் இவர்களுடையதாகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு இதை உடனடியாக விசாரணைக்குட்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாது, இதுகுறித்த விசாரணையை ஐக்கிய நாடுகள் சபையும் உடனடியாக மேற்கொண்டு உண்மையை வெளியுலகிற்குக் கொண்டுவர வேண்டும் என்றார்
ஏற்கனவே அப்பகுதியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட 18 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் நேற்று அப்பகுதியில் மீண்டும் எட்டு எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 26 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் குழந்தைகளின் உடற்பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment