07 January 2014

அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காது மனித உரிமை மீறல்களையே செய்கிறது.

இலங்கையில் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச நாடுகள் அதிக அழுத்தங்களை கொடுக்கின்றன. யுத்தத்தின்போது உயிரிழப்புக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததே. எனினும் யுத்தத்திற்கு பின்னர் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நிவாரணங்களை வழங்காது அரசாங்கம் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களையே மேற்கொண்டு வருவதாக பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கேட்போர் கூடத்தில் பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்ட விஜித ஹேரத் பா.உ தெரிவித்துள்ளார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் மக்களை அடக்கி கட்டுப்படுத்துவது போல் சர்வதேச நாடுகளுடனும் நடந்து கொள்ளலாம் என அரசாங்கம் நினைத்து விட்டது. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி இலங்கை அரசாங்கத்தினால் வெற்றிபெற முடியாது. அனைத்துத தவறுகளையும் அரசாங்கத்தின் மீது வைத்துக்கொண்டு நியாயம் கதைப்பது அர்த்தமற்ற செயலாகும் என்றார். 

சர்வதேச விடயங்களில் முட்டாள்த்தனமாக செயற்பட்டால் சர்வதேச ரீதியில் இலங்கை மீதான கட்டுப்பாடுகளையும், பொருளாதாரத் தடைகளையும் விதிக்கும் நிலைமை ஏற்படலாம். அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாயில் இலங்கையில் அப்பாவி மக்களே பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும். 
தேர்தல் காலங்களில் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி காரியங்கள் சாதிப்பது போல சர்வதேச நாடுகளிடமும் பொய்யான வாக்குறுதிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசு வழங்கி வருகிறது. சர்வதேசத்துடன் மோதுவதால் மிகவும் பாரதூரமான விளைவுகளையே சந்திக்க நேரிடும் மக்களை பணயம் வைத்து சர்வதேசத்துடன் மோதுவதை அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார். 

No comments:

Post a Comment