19 August 2014

பொருத்தமற்ற 1987 ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தம்

இலங்கை நாடாளுமன்ற ஊடகவியலாளர் சங்கம், அரசாங்க தகவல் திணைக்களத்துடன் இணைந்து   ஏற்பாடு செய்துள்ள     விசேட விரிவுரை     பேராசிரியர் ரொஹான் குணரட்ன, இலங்கை நாடாளுமன்றில் நடத்தவுள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை 20 ஆம் திகதி,  முற்பகல் 10:30 மணியிலிருந்து 11:30 மணி வரை நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியின் குழு அறை 2இல் இடம்பெறவுள்ள இந்த விரிவுரை  மோ டி தலைமையிலான இந்தியா: இந்திய-இலங்கை உறவுகளில் ஒரு திருப்புமுனை’ எனும் தலைப்பில்  பேராசிரியர் ரொஹான் குணரட்ன  தெரிவித்துள்ளமை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சிறந்த நண்பனாகவோ அல்லது கூடாத எதிரியாகவோ இருக்கக்கூடும். ஒரு குறிக்கோளுடைய மனிதர் என்ற வகையில் மோடி ஒரு முட்டாள்தனமான தலைவரல்ல. முட்டாள்களையோ அல்லது எதிரிகளையோ மோடி ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்.

புது டில்லியின் கடந்த கால சம்பிரதாயங்களை தகர்த்து இந்தியாவை புதியதும் தந்திரோபாயமிக்கதுமான பாதையில் மோடி திறமைவாய்ந்த தலைவர்களின் பரிணமிப்புடன் வழிநடத்தி செல்கிறார்.

‘காங்கிரஸைப் போன்று மேற்குலக சார்பு போக்கில் இழுபட்டு செல்லாமல், இந்தியாவே சிறந்ததாக உருவாக வேண்டும் என்பதே மோடியின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இன்னுமொரு பனிப்போருக்கு பங்களிப்பு செய்வதிலும் பார்க்க மோடி மேற்குலக மற்றும் கீழைத்தேய நாடுகளுடன் தொடர்புகளை கொண்டிருப்பார். இருந்தபோதிலும், புதுடில்லி தொடர்ந்தும் சீனா தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கும் அதேநேரம், இந்தியா பல்முனை உலகமொன்றுக்கு பங்களிப்புச் செய்யும் மூன்றாவது சக்தியாக இருக்கும்’ என்று பேராசிரியர் குணரட்ன தெரிவித்துள்ளார்.

இந்திய காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு பாரதிய ஜனதா கட்சி எழுச்சி பெற்றமையானது இந்திய-இலங்கை உறவுகளை பலப்படுத்துவதற்கு சிறந்த வாய்ப்பொன்றை உருவாக்கியுள்ளது.
பொருத்தமற்ற 1987 ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மற்றும் காலம் கடந்துவிட்ட 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் பார்க்க, அதிகாரத்தை இலங்கை முழுவதிலும் பார்க்க மத்தியில் பகிர வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்த மற்றும் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிரளிக்கும் முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளித்துவரும் தமிழ்நாட்டின் சில அரசியல்வாதிகள் பகைமை உணர்வை கொண்டிருக்கின்ற போதிலும், இந்தியாவின் தென் பகுதியிலுள்ள பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாரதிய ஜனதாக கட்சி அல்லாத பங்குதாரர்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு இலங்கை புதுடில்லியுடனான நல்லுறவை பயன்படுத்த வேண்டியது மிக முக்கியமாகும்.

‘மோடியின் எழுச்சியானது இந்தியாவோ அல்லது இலங்கையோ புறக்கணிப்பு, அலட்சியம் அல்லது இழப்பு போன்ற எதற்கும் வாய்ப்பளிப்பதற்கான தருணமல்ல. இந்திய-இலங்கை உறவுகளில் புதிய யுகமொன்றுக்கு கட்டியம் கூறுவதற்கு இந்த வாய்ப்பை இலங்கையும் இலங்கையர்களும் புத்திசாதுர்யமாகவும் எச்சரிக்கையாகவும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்றும் பேராசிரியர் குணரட்ன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment