25 August 2014

ஆதா­ரங்­களின் தரத்தை மேம்­ப­டுத்­த நட­வ­டிக்கை

இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­வரும் ஐ. நா  மனித உரி­மைகள் பேரவை குறித்த விசா­ரணை செயற்­பாட்டை வலுப்­ப­டுத்தும் நோக்கில் புதிய ஏற்­பா­டு­களை விசா­ரணை கட்­ட­மைப்பில் இணைத்­துக்­கொள்­ள­வுள்­ளது.

விசா­ரணை செயற்­பா­டு­களை வலுப்­ப­டுத்­து­வதன் ஒரு கட்­ட­மாக, விசா­ர­ணை­க­ளுக்கு வெளி­நாட்டு அர­சாங்­கங்­களின் உத­வி­களை பெற்­றுக்­கொள்ளும் வகையில் சட்ட ஏற்­பா­டு­களை தமது திட்­டத்தில் மனித உரிமைப் பேரவை இணைத்­துக்­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதா­வது விசா­ர­ணைக்­குழு, தமது ஆதா­ரங்­களின் தரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக “நம்­பிக்­கைக்­கு­ரிய நியா­ய­மான தளம்” என்ற ஐக்­கிய நாடு­களின் சட்ட அம்­சத்­தையும் தமது விசா­ரணை த் திட்­டத்தில் இணைக்­க­வுள்­ளது. விசா­ரணை செயற்­பா­டு­களின் தரத்தை உறு­தி­ப­டுத்­து­வ­தற்­கா­கவே இந்த செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

அதா­வது விசா­ரணை செயற்­பாட்டில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வை­யா­னது நம்­பிக்­கை­கைக்­கு­ரிய தகவல் மூலத்தை பெறு­வதை உறு­தி­ப­டுத்­து­வ­தாக இந்த புதிய ஏற்­பா­டுகள் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

மேலும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்டம் மற்றும் சர்­வ­தேச மனித உரிமை சட்­டங்கள் மீறப்­பட்­டமை தொடர்பில் நீதி­மன்ற விசா­ர­ணையை கோரும் சாத்­தி­யங்கள் உயர்ந்து காணப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய சட்­ட­வாக்க இணைப்­பின்­படி இலங்­கையை தவிர்ந்த ஏனைய அர­சாங்­கங்கள், தமது விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பை வழங்க வேண்டும் என்­பதை ஐக்­கிய நாடுகள் விசா­ர­ணைக்­குழு எதிர்­பார்க்­கி­றது.

இதற்­காக 1948ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் சாச­னத்தின் கீழ் ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் அலு­வ­லக அதி­கா­ரிகள் கொண்­டுள்ள ராஜ­தந்­திர அந்­தஸ்தை பயன்­ப­டுத்­திக்­கொள்ள விசா­ர­ணைக்­குழு எதிர்ப்­பார்ப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி ஐக்­கிய நாடு­களின் விசா­ரணை குழு­வா­னது விசா­ரணை முடிவில் இறுதி முடிவை வெளி­யி­டாது என்றும் மதிப்­பீட்­டையே வெளி­யிடும் என்றும் அவை எதிர்­கால குற்­ற­வியல் விசா­ர­ணைக்கு வழி­கோலும் என்றும் தெரி­விக்­க­ப­டு­கின்­றது.

இதே­வேளை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை விசா­ரணைக் குழு நேர்­காணல் செய்யும் சாட்­சி­களின் நாடு­களின் அர­சாங்­கங்கள் விசா­ரணைக் குழு­வு­டனக் ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட அழைக்­கப்­படும் என்று விசா­ரணை செயற்­பாட்டின் புதிய ஏற்­பா­டுகள் கூறு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றெ­னினும் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணை செயற்­பாட்­டுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­மாட்டோம் என்றும் விசா­ர­ணை­யா­ளர்கள் இலங்கை வரு­வ­தற்கு விசா வழங்­கப்­ப­ட­மாட்­டாது என்றும் இலங்கை திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளது.

கடந்த வாரம் இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்திருந்த  கோரிக்கைக்கு பதிலளித்த அரசாங்கம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்தாலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று கூறியிருந்தது.

No comments:

Post a Comment