28 August 2014

அதிகாரப் போராட்டத்தில் முன்னாள் வட-கிழக்கு மாகாண முதல்வர் வரதர்

வட மாகாணசபைக்கான அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக இன்று முதல்வர் எவ்வாறெல்லா போராடுகின்றாரோ அவ்வாறே அன்றைய முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாளும் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள போராடினார் என்பது எழுதி வைக்கப்பட்ட வரலாறு என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகர சபையின் உறுப்பினருமான ஏ.எல்..ஏ.அப்துல் மஜீத் கல்முனை மாநகரசபை அமர்வில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் வடக்கு கிழக்கை பொறுத்தவரை தமிழ், முஸ்லீம் உறவு என்பது காலத்தால் வரலாறு எடுத்துக் கொள்கின்ற அளவுக்கு கட்டிவளர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். சிறுபான்மையினர் எதிர்நோக்கியுள்ள சவாலை முறியடிப்பதற்கு கருத்து வேறுபாடுகளுக்கப்பால் தமிழ்-முஸ்லீம் சமூகம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
 
தமிழர் இருக்கின்ற இந்த தமிழர் சுயநிர்ணய பிராந்தியத்துக்குள் முஸ்லீம்களுக்கும் சுயநிர்ணய உரிமை இருக்கின்றது என்பதனை முதன் முதலாக எடுத்துச் சொன்னவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம்.
 
பிரேமதாசா தலைமையிலான ஐ.தே.க அரசு மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் புலிகளுடன் பேச்சு நடாத்திக் கொண்டு  அதிகாரத்தை கொடுப்பதற்கு பின்வாங்கியது.
அதனால் வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாள் 19 அம்ச கோரிக்கையை முன்வைத்தார்.
 
குறித்த கோரிக்கையில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசiயிலே முஸ்லீம்களுக்கும் சுயாட்சி உரிமை இருக்கிறது என்று தெரிவித்த வரதராஜப்பெருமாள். கிழக்குக்கு மாத்திரமல்ல மலையக தமிழர்களுக்கும் சுயாட்சி வழங்க வேண்டும் என்றார். வரதராஜப்பெருமாளின் கோரிக்கையில் அந்த விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய பிரேமதாச அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
 
வட மாகாணசபை முதலமைச்சர் முன்னாள் நீதியரசர். அவருடைய காலத்தில் வடமாகாணசபைக்கு அதிகாரங்களை பெற்றுக்கொள்ள முடியும். அதனைக்காட்டி கிழக்குக்கும் அதிகாரங்களை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் தற்போது முதலமைச்சர் விக்னேஸ்வரனும் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளார். என்றார் அப்துல் மஜீத்

No comments:

Post a Comment