29 June 2015

தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் தீர்வு குறித்து தெரிவிக்க வேண்டும்

தேசிய கட்சிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெளியிடவுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். 

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் தேர்தலின் பின்னர் யார் பெரும்பான்மை ஆட்சியை அமைப்பதாக இருந்தாலும் சிறுபான்மை கட்சிகளின் உதவி தேவையாக இருக்கும் என்பதே இன்றைய அரசியல் சூழ்நிலையாகும். எனவே தேசிய கட்சிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக  தெரிவிக்க வேண்டு;. இனிமேலும் காலத்தை கடத்த முடியாது. புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்ட பின்பு விரைவில் தீர்வை முன்வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் பெரும்பான்மை அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டுமாயின் த.தே.கூ இன் ஆதரவும் மற்றும் சிறுபனர்மை கட்சிகளின் ஆதரவு நிச்சயமாக தேவையாக இருக்கும். அவ்வாறானதொரு சூழ்நிலையில் எமது எதிர்ப்பார்ப்புக்களின் அடிப்படையில் ஆதரவு தர நாம் தயாராக உள்ளோம் என்றார். 

நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் தீர்வு சம்பந்தமாக காத்திரமான விடயங்களை முன்வைக்கிறோம். தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் பொறுமை காக்க முடியாது. தமிழ் மக்களுக்கான தீர்வு அரசாங்கத்தால் முன்வைக்கப்பட வேண்டும். அது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகார வலுவுடையதாக இருக்க வேண்டும். இதனை பெரும்பான்மை மக்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தவிர ஒரு சர்வஜன வாக்கெடுக்கை நடாத்தி முடிவுக்கு வரலாம். நாம் முன்வைக்கின்ற அரசியல் தீர்வை பெரும்பான்மை சமூகமும், சிறுபான்மை மக்களும் ஏற்றுக்கொள்கின்றார்களா என்பதை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நடாத்திப் பார்க்கட்டும். ஒளியு மறைவு மூலமாக நிரந்தரமான அரசியல் தீர்வை காண முடியாது. பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு ஆட்சியமைக்கின்ற கட்சிகள் இந்த முயற்சியை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்றார். 

சர்வதேச சமூகம் இந்த முயற்சிக்கு எல்லா வகையிலான உதவிகளையும் செய்வார்கள் என்று நம்பிக்கை கொள்ளலாம். தேர்தல் நடந்து முடிந்த பின் யார் ஆட்சி அமைப்பார்கள் என்று கூற முடியாது. புதிய அரசாங்கம் புதிய அரசியல் சூழலில் எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை முன்வைக்க முடியுமென்று நாம் நம்புகின்றோம். ஊகத்தினடிப்படையில் எதையும் கூற முடியாது. 

தற்போதுள்ள சூழ்ந்pலையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து சிந்திக்கக்கூடிய சக்திகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறக்கூடிய வாய்ப்புண்டு. அந்த அடிப்படையில்  த.தே.கூ மற்றும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு அதற்கு தேவையாக இருக்கலாம். 

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமாக நீண்டகாலமாக ஓரு முடிவும் எட்டப்படவில்லை. 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபின்பு அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை அடைவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, பிரேமதாசா, திருமதி சந்திரிகா, மற்றும் பிரதமர் ரணில், மஹிந்த ராஜபக்ஷ காலத்தில்  முன்னெடுப்புக்கள் இடம் பெற்றன. ஆனால் யாருடைய காலத்திலும் தீர்வு எட்ப்படவில்லை. துரதிஸ்டவசமாக மகிந்த ராஜபக்ஷ காலத்தில் முன்னேற்றங்கள் பின்னடைவை கண்டன. தீர்வுக்கு தடையாக அமைந்தது. 

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு காலதாமதப்படாமல் விரைவில் கொண்டுவரப்பட வேண்டும் அவ்வாறான தீர்வு பெரும்பான்மை சமூகமும் சிறுபான்மை சமூகமான தமிழ் முஸ்லிம் மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் இருத்த்ல் அவசியம் என்றார். திரு. இரா.சம்பந்தன்.

No comments:

Post a Comment