05 July 2015

25வது தியாகிகள் தினம் - பிரான்ஸ்

கடந்த 28 யூன் ஞாயிற்றுக்கிழமை பரிஸின் புறநகர் பகுதியான லனியில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் பிரான்ஸ் கிளையினரால் நடத்தப்பட்ட 25வது தியாகிகள் தின நிகழ்வில் தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வை பிரான்ஸ் தோழர்கள், சேவியரும், அந்தோனிப்பிள்ளை ரஞ்சனியும் தியாக தீபத்தை ஏற்றி ஆரம்பித்து வைத்தனர். ஈழப்போரில் இன்னுயிர்நீத்த  தோழர்கள், போராளிகள், பொதுமக்களுக்காக எழந்து நின்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தோழர் பிரான்சிஸ் தனது ஆரம்ப உரையில் தோழர் பத்மநாபாவுடன் நேரடியாக பழகும் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும் அவரைப்பற்றி அறிந்திருப்பதோடு இவ்வாறான நிகழ்வில் கலந்து கொள்வதை ஒரு கடமையாக கருதுகிறேன் என்றார்.

அதனைத் தொடர்ந்து  தமிழ் பேசும் மக்களின் அரசியல் போராட்டத்தின் ஆரம்ப  காலங்களில் மிதவாத அரசியல் அமைப்புக்களோடு பணியாற்றியவரும், ஊடகத்துறை சார்ந்த அரசியல் ஆய்வாளருமான தோழர் உதயன் தனது உரையின் போது பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் பத்பநாபா மீண்டும் ஐக்கியத்துடனும் புத்துணர்சியுடனும் இயங்கவேண்டும். தியாகிகள் தின ஏற்பாடுகளுக்காக இறுதிநாள் வரை காத்திராமல் காலக்கிரமத்துடன் ஆயுத்த வேலைகளை ஆரம்பித்து இன்னும் சிறப்பாக செய்யவேண்டும் என்றார்.

தலித் மேம்பாட்டு முன்னணி உறுப்பினரும் பிரான்ஸ் ஈ.பி.ஆர.எல்.எவ் அமைப்பில் ஆரம்பகாலங்களில் பணியாற்றியவருமான தோழர் நாதன் உரை நிகழ்த்துகையில் நான் தலைமைத்துவம் மீதான வழிபாடுகள் அற்றவன் ஆயினும் பத்மநாபா தொடர்பாக பிரமிப்பு கொண்டிருந்ததுடன் ஆரம்ப அரசியல் நடவடிக்கைகளை ஈ.பி.ஆர்.எல்.எப் இருந்தே கற்றுக்கொண்டேன். ஆனாலும் பின்நாட்களில் அரசியல் முரண்பாடுகள் காரணமாக அதிலிருந்து விலக நேரிட்டது என்று குறிப்பிட்டார். 

தொடர்ந்து உரையாற்றிய தோழர் அந்தோனிப்பிள்ளை “இன்று நாம்  செய்ய வேண்டியது “ என்ன என்ற கேள்வியுடன் உரையாற்றும் போது இன ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரிக்கப்பட்டிருந்த மக்கள் இன்று இயக்கம் என்ற புதிய பிரிவாகவும், பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். திருமண பேச்சுக்களின் போது எந்த இயக்கம் என்ற கேள்விகளும் மிகச் சாதாரணமாகிவிட்டது. தோழர் நாபா இடதுசாரிகளுடன் குறிப்பாக தென்னிலங்கை சிங்கள தோழர்களுடன் நெருக்கமான உறவினை கொண்டிருந்தார். ஆனால் இன்று ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்டங்களில் சிங்கள தோழர்கள் எவரையும் காணாதது மிகுந்த மனவருத்தத்தை அளிப்பதுடன் அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் சிங்களத்தை மொழிப்பெயர்ப்பு செய்யப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால செயற்பாட்டாளர்களான ரட்ணசபாபதி, பத்மநாபா, சிறிசபாரட்ணம் மற்றும் பிரபாகரனுடன் உள்ளிட்ட பல தலைவர்களுடன் நெருங்கி பணியாற்றியவர் தோழர் அந்தோனிப்பிள்ளை குறிப்பிடத்தக்கவராவார். 

அதையடுத்து பத்மநாபா தோழர்கள் கொட்வின், மோகன், லோகராஜ், முத்துக்குமார் ஆகியோர் தமது ஆரம்பகால அனுபவங்களையும் இன்றைய அவசிய தேவைகள் பற்றியும் எடுததுரைத்தனர்.

இந்நிகழ்வை நெறிப்படுத்திய தோழர் கிருபன் உரையாற்றுகையில் முன்னேற்பாடுகள் எதுவுமின்றி ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் பல விடயங்கள் கருத்திற்கெடுக்காமை குறித்து அனைவராலும் சுட்டிக்காட்டப்பட்டது. எதிர்வரும் காலங்களில் இவை நிவர்த்தி செய்யப்படும் என்றார். இளம் வயதில் அம்புலி மாமா கதை புத்தகங்களை வாசித்த எமது கரங்களில் தாய், உண்மை மனிதனின் கதை போன்றவற்றை தந்து சமூக அரசியலை கற்றுத்தந்த ஈ.பி.ஆர்.எல்.எப் மக்களை நேசித்த மகத்தான தலைவன் தோழர் நாபாவை எமக்கு தந்திருந்தது. மாகாணசபை காலங்களில் இந்தியாவில் தோழர் நாபாவுடன் ஏற்பட்ட சந்திப்புக்கள் வாழ்வின் பெறுமதிமிக்க தருணங்களாகும். 

இழப்புக்களையும் பின்னடைவுகளையும் தோல்விகளையும் கடந்து மீண்டும் மீண்டும் சமூக விடுதலைக்கான போராட்டத்தில் உந்தித்தள்ளும் ஊக்கவிசையை எம் உள்ளத்தில் விதைத்த நாட்கள் என நினைவுபடுத்தினார். அதேபோல் தோழர் றொபட் இன்னும் தொடரும்மகத்தான் மறைந்த ஆற்றல்மிக்க தோழர்கள் வரிசையில் புஸ்பராஸ், உமாகாந்தன் போன்றவர்களும் குறிப்பிடத்தக்கவர். 

ண்மைக்காலங்களில் புதிய தோழர்களின் செயற்பாடுகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக தியாகிகள் தினத்தை ஏற்பாடு செய்வதில் ஈடுபாட்டுடன் உழைத்த தோழர்கள் தொடர்ந்தும் செயலாற்றல்மிக்க கட்டமைப்பையும் செயற்திட்டங்களையும் உருவாக்கி செயலாற்ற வேண்டும். இதற்கான பங்களிப்பும் என்றும் இருக்கும். இனிவரும் தியாகிகள் தினம் மேலும் சிறப்பானதாக அமைய வேண்டும் என்றார். 

இந் நிகழ்வு சிறப்பாக அமைய அனைத்து வழிகளிலும் உதவியும் ஒத்துழைப்பும் வழங்கிய தோழர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், தோழர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் - பிரான்ஸ் கிளை





No comments:

Post a Comment