07 August 2015

தமிழர்கள் அதிகாரப் பகிர்வைத்தான் கோருகின்றனர்

தமிழர்கள் தனி­நாட்டுக் கோரிக்­கையை கைவிட்டு அதி­காரப் பகிர்வை கோரி­யுள்ள நிலையில், மஹிந்த ராஜ­பக்ஷ மட்டும் நாடு பிரியும் ஆபத்து உள்­ள­தா­கவும் பிரி­வினை அச்­சு­றுத்தல் காணப்­ப­டு­கின்­ற­தாக இன­வா­தத்தை பரப்­பி­வ­ரு­கின்றார் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன  செய்­தி­யாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­கா­ரப்­ப­கிர்வு என்ற நிலைப்­பாட்­டி­லி­ருந்து நாங்கள் மாற­மாட்டோம். தற்­போது ஒற்­றை­யாட்சி என்­பது ஒரு பிரச்­சி­னை­யல்ல. ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­கா­ரத்தைப் பகிர முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ அர­சியல் மேடை­களில் இன­வாதம் பேசிக்­கொண்­டிக்­கின்றார். நாடு பிரிந்­து­விடும் அபாயம் இடம் பெற்­றுள்­ள­தா­கவும் அவர் கூறிக்­கொண்­டி­ருக்­கிறார். ஆனால் இலங்­கை­யிலும், சர்­வ­தே­சத்­திலும், தற்­போது எந்­த­வொரு தரப்பும் தனி­நாட்­டைக்­ கோ­ர­வில்லை.

முன்னாள் புலிப் போரா­ளிகள் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில்  கூட தனி­நாட்டுக் கோரிக்­கையை கைவிட்­டு­விட்டு அதி­கா­ரப்­ப­கிர்வைக் கோரி­யுள்­ளனர். தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் தனி­நாட்­டுக்­கோ­ரிக்­கையை கைவிட்டு அதி­கா­ரப்­ப­கிர்­வையே கோரி­யுள்­ளது. புலம் பெயர் அமைப்­புக்­களும் இன்று தனி­நாட்­டைக்­கோ­ர­வில்லை. மாறாக அதி­கா­ரப்­ப­கிர்வைக் கோரி­யுள்­ளன.

அந்த வகையில் இன்று முழு­நாடும் அதி­கா­ரப்­ப­கிர்வு குறித்து பேசு­கின்­றதே தவிர தனி­நாடு குறித்து கோரு­வ­தில்லை. மாறாக மஹிந்த ராஜ­பக்ஷ அர­சியல் மேடை­களில் இன­வா­தத்தை பேசிக்­கொண்­டி­ருக்­கின்றார். நாடு பிரியும் ஆபத்து உள்­ள­தா­கவும், பிரி­வினை அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும், அவர் கூறிக்­கொண்­டி­ருக்­கின்றார். எனினும் அவ்­வா­றான எந்­த­வொரு அச்­சு­றுத்­தலும் தற்­போது இல்லை. உண்­மையைக் கூறப்­போனால் தனி­நாட்­டுக்­ கோ­ரிக்­கைக்­கான அச்­சு­றுத்தல் தற்­போது இல்­லாமல் போயுள்­ளது.

இன­வா­தத்தை கக்­கு­வ­தனால் தான் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் தேர்தல் பிர­சார மேடைக்கு ஏறப்­போ­வ­தில்லை என்று மஹிந்த சம­ர­சிங்க மிகவும் தைரி­ய­மாக கூறி­யி­ருந்தார்.

இன்று மக்கள் அர­சியல் ரீதியில் சிந்­திப்­ப­தற்கு முன்­வந்­துள்­ளனர். சோற்­றுப்­பார்­சல்­க­ளுக்கு வாக்­குப்­போடும் காலம் மலை­யே­றி­விட்­டது. கணவான் அர­சி­யலை மக்கள் விரும்­பு­வ­துடன் அது குறித்து மிகவும் கவ­ன­மாக சிந்­தித்து முடி­வெ­டுக்­கின்­றனர்.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வாக சமஷ்டி முறை­க்குள் அதி­கா­ரப்­ப­கிர்வை கோரியுள்ளமை தொடர்பாக பதிலளிக்கையில் எமது நிலைப்­பாட்டை நாங்கள் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் ஊடாக அறி­வித்­தி­ருக்­கின்றோம். அதா­வது ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­கா­ரப்­ப­கிர்வு என்­பதே எமது நிலைப்­பா­டாகும். அந்த நிலைப்­பாட்­டி­லி­ருந்து நாங்கள் மாற­மாட்டோம்.

தற்­போது ஒற்­றை­யாட்சி என்­பது ஒரு பிரச்­சி­னை­யல்ல. ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­கா­ரத்தைப் பகிர முடியும். இந்­தி­யாவில் ஒற்­றை­யாட்­சியும் சமஷ்­டியும் கலந்த கலப்பு முறை­மையே காணப்­ப­டு­கின்­றது.

அது மட்­டு­மன்றி இலங்­கையில் 1980களில் அதி­காரப் பகிர்வு குறித்து பேசப்­பட்­டது. அப்­போது அது ஒரு ஆபத்­தான விட­ய­மா­கவும் காட்­டப்­பட்­டது. ஆனால் அது தற்­போது ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­கா­ரத்தைப் பகிர அனை­வரும் முன்­வந்­துள்­ளனர். எனவே ஒற்­றை­யாட்சி முறையில் அதி­கா­ரத்தைப் பகிர அர­சாங்கம் முன்­வந்­துள்­ளது. அதா­வது அனை­வரும் ஒரு இடத்­திற்கு வந்­துள்­ளனர். அந்த இடத்தில் இருந்து தீர்வு காண்பதே யதார்த்தமானதாகும்.

அரசியல் தீர்வு சம்பந்தமான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் எனது தனிப்பட்ட நிலைப்பாடு மிகவும் வித்தியாசமானது. மிகவும் ஆழமானது. ஆனால் தற்போது ஒற்றையாட்சியில் தீர்வு காண்போம் என அனைத்து தரப்பினரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளமையின் காரணமாக இதனை ஏற்றுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்தார் ராஜித சேனாரட்ன.

No comments:

Post a Comment