31 October 2015

கைதிகள் குற்றம் சாட்டப்படாமல் நீண்ட காலமாக சிறையில்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரும்போது இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களையும் விடுதலை செய்ய வேண்டுமெனக் கூறுவது நகைப்புக்குரியதென வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்கி­னேஸ்­வரன்  தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு பிணை­ வ­ழங்­குதல் தொடர்­பான யோசனை குறித்து மேற்கண்டவாறு தெரி­வித்தார்.
 
அவர் மேலும் தெரி­விக்­கையில், அர­சியல் கைதி­களை பிணையில் விடு­தலை செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்­ளது. ஆனால் இவர்­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­கு­வது என்­பது அர­சியல் ரீதி­யான தீர்­மானமாகும். அர­சியல் ரீதியான தீர்­மா­னங்களுக்கு பல கார­ணங்­களை மனதில் வைத்து செயல்வடிவம் கொடுக்கின்றனர்.
 
ஜே.வி.பி. காலத்தில் கொடூ­ர­மான செயலை செய்­த­வர்­க­ளுக்கு கூட பொது மன்­னிப்பு வழங்­கி­னார்கள். ஆனால் தமிழ் கைதிகளுக்கு ஏன் அவ்வாறான மன்னிப்பை வழங்­க­வில்லை என்று எல்­லோரும் கேள்வி கேட்­கின்­றனர்.
 
இந்நிலையில் பொது மன்­னிப்பு வழங்­கப்­ப­டு­மானால் எதிர்காலத்தில் குற்றம்சாட்­டப்­ப­டப்­போகும் இரா­ணு­வத்­தி­ன­ரையும் நாங்கள் விடுக்­க­வேண்­டு­மென கூறு­கி­றார்கள். இந்த விடயம் உண்­மையில் நகைபபுக்குரிய விடயம்.
 
ஏனெனில் இராணுவத்தினர் மீது இன்­னமும் குற்றம் சாட்­டப்­ப­ட­வில்லை. அவ்வாறிருக்கையில் இக்கருத்துக்களை முன்வைப்பதானது இராணுவத்தினர் குற்றம்சாட்­டப்­ப­ட ­வேண்­டி­ய­வர்கள். அவர்கள் குற்­ற­வா­ளிகள் என்று இவர்கள் தீர்­மா­னித்து விட்­டார்­களா என்ற கேள்வி எழுகிறது.
 
மேலும் இக்கருத்துக்கள் இராணு வத்தினரை தற்போதே குற்றம்சாட்டி சிறையில் அடைத்­து­விட்டு இன்னும் 7,8 ஆண்­டுகளின் பின்னர் அவர்களை விடுவிக்க வேண்டி இருக்கும் என்ற நிலைமையையே உருவாக்குகிறது.
 
ஆகவே தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்­னிப்பில் விட­மு­டி­யாது என்று கூறுவது தவறானது. இரா­ணு­வத்­தி­னரைப் பொறுத்தவரையில் அவர்கள் இன்னமும் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­ப­ட­வில்லை. இவர்கள் குற்றம் செய்­ய­வில்லை என்று அரசாங்கமும் கூறிக்கொண்­டி­ருக்­கி­றது.
 
ஆனால் குற்றம்சாட்­டப்­ப­டாத நிலையில் இவ்­வ­ளவு காலமும் தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் வாடு­கி­றார்கள். அவர்கள் பல்வேறு பிரச்­சி­னையை எதிர்­நோக்கி வரும் நிலையில் அவர்­களை பொது மன்­னிப்பில் விடுதலை செய்யாது எதிர்காலத்தில் குற்­ற­வா­ளி­களாக அடையாளம் காணப்படலாம் என்ற சந்தேகத்திலுள்ள இராணுவத்தினருடன் தொடர்புபடுத்திப் பேசுவது நகைப் புக்குரியது என்றார்.

No comments:

Post a Comment