30 October 2015

முதல்வர் திறக்கவிருந்த கட்டடத்துக்கு ஒயில் வீச்சு, பூட்டுக்கள் உடைப்பு

காத்தான்குடி அந்நாசர் வித்தியாலயத்தின் விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டடத்திற்கு கறுப்பு ஒயில் வீசப்பட்டு அக்கட்டடத்தின் நினைவுக்கல் உடைக்கப் பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட இப்பாடசாலையின் விஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வு கூடக் கட்டடம் நேற்று வியாழக்கிழமை காலை கிழக்கு மாகாண முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட விருந்த நிலையிலேயே இக்கட்டடத் திற்கு கறுப்பு ஒயில் வீசப்பட்டு அந்தக் கட்டடத்தின் நினைவுக் கல்லும் உடைக் கப்பட்டுள்ளது.

இ ச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பாடசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் கறுத்த பொலித்தீன் கட்டப்பட்டிருந்ததுடன் பாட சாலையின் அதிபர் அறை மற்றும் பாட சாலையின் பிரதான நுழைவாயில் கதவின் பின் பகுதியில் போடப்பட்டிருந்த பூட்டுக் களுக்கும் சுப்பர்குளு எனப்படும் பசையும் பூசப்பட்டு திறக்க முடியாதவாறு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பாடசாலையின் அதிபர் எம். அல்லாப்பிச்சை காத்தான் குடி பொலிஸாருக்கு தெரியப்படுத்திய தையடுத்து அங்கு விரைந்த காத்தான் குடி பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணை களை மேற்கொண்டதுடன் அங்கு போடப்பட்டிருந்த பூட்டுக்களையும் உடைத்து கதவுகளை திறந்தனர்.

குறித்த பாடசாலையின் விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு கூடக் கட்டடம் இரா ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பொருளாதார அபிவி ருத்தி பிரதியமைச்சராக பதவி வகி த்த போது அவரின் சிபாரிசுக்கமைய ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நிலையில் அக்கட்ட டம் திறந்து வைக்கப்பட்டது.

எனினும், அது உத்தியோகபூர்வமாக திறக்கப்படவில்லை எனவும் கிழக்கு கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாண முதலமைச்சரே இந்தக் கட் டடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவேண்டும் எனவும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள வட்டா ரங்கள் தெரிவித்தன.

இக்கட்டடம் கிழக்கு மாகாண முதல மைச்சரினால் திறந்து வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தச் சம்பவம் இடம் பெற்றிருக்கலாமென கூறப்படு கின்றது.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் நேற்று பிற்பகல் கிழக்கு மாகாண முத லமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி. நிசாம், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சேகு அலி ஆகி யோர் சென்று அக்கட்டடத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

No comments:

Post a Comment