31 October 2015

பௌத்த நாடு என்ற பெயரில் திட்­ட­மிட்ட இன அழிப்பும், அடக்­கு­மு­றையும் இடம்­பெற்­றன

பௌத்த நாடு என்ற பெயரில் மிகவும் மோச­மான வகையில் சிறு­பான்மை மக்கள் அடக்­கப்­பட்டும் திட்­ட­மிட்ட ஒரு இன அழிப்பும், அடக்­கு­மு­றையும் கடந்த காலங்­களில் இடம்­பெற்­றன. அதில் இருந்து மக்­க­ளையும் நாட்­டையும் விடு­வித்து அதனை ஜன­நா­ய­கத்தின் பாதையில் திருப்­பி­யுள்ளோம். கடந்­த­கால கசப்­பான சம்­ப­வங்­களை மறந்து அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் என வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர வடக்கில் இருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்டு 25ஆண்­டுகள் நிறை­வ­டைந்­த­தை­யொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த கருத்­த­ரங்கில் சிறப்பு அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரையாற்றுகையிலேயே குறிப்­பிட்டார்

மேலும் கூறு­கையில், இலங்­கையின் கடந்த கால வர­லாற்றில் பல சந்­தர்­ப்பங்­களில் முஸ்லிம் மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். விடு­த­லைப்­பு­லி­களின் ஆக்­கி­ர­மிப்­பிலும் வடக்கில் ஆயுத கலா­சா­ரத்தை பரப்­பிய சந்­தர்ப்­பங்­க­ளிளும் முஸ்லிம் மக்கள் அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டனர். இவை கடந்­த­கால கசப்­பான சம்­ப­வங்­க­ளாக உள்­ளன. குறிப்­பாக வடக்கு முஸ்­லிம்கள் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் வெறும் 500 ரூபா­வுடன் வெளி­யேற்­றப்­பட்டு இன்­றுடன் 25 ஆண்­டு­களை கடந்­து­விட்­டன. விடு­த­லை­பு­லி­களின் ஆக்­கி­ர­மிப்பும் அடக்­கு­மு­றை­களும் பல­ம­டங்கு அதி­க­ரித்து இருந்த கால­கட்டம் அது. தமிழ் முஸ்லிம் மக்கள் இரண்டற கலந்து வாழ்ந்த சந்­தர்ப்­பத்தில் விடு­த­லைப்­பு­லி­க­ளினால் இவ்­வா­றான செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­மையே இரண்டு சமூ­கத்தின் மத்­தி­யிலும் பாரிய பிளவை ஏற்­ப­டுத்­தி­யது.

அதேபோல் கடந்த ஆட்­சியில் மிகவும் மோச­மான வகையில் சிறு­பான்மை இன மக்கள் பாதிக்­கப்­பட்­டனர். பௌத்த நாடு என்ற பெயரில் மிகவும் மோச­மான வகையில் சிறு­பான்மை மக்கள் அடக்­கப்­பட்டு வந்­தனர். அதேபோல் திட்­ட­மிட ஒரு இன அழிப்பும், அடக்­கு­மு­றையும் கடந்த காலங்­களை நடை­பெற்­றன. பெரும்­பான்மை ஆதிக்­கத்தை தூண்­டி­விடும் வகை­யிலும் அவர்­க­ளது கரங்­களை உயர்த்தும் வகை­யிலும் இவர்­க­ளது செயற்­பா­டுகள் அரங்­கேற்­றப்­பட்­டன.

அதேபோல் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் நாட்டில் ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்த கடந்த காலங்­களில் ஆட்­சி­செய்த தலை­மைகள் மறந்­து­விட்­டன. ஐக்­கிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்ப நல்ல சந்­தர்பம் கிடைத்­தது. ஆனால் மூவின மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து தேசிய ஒற்­று­மை­யுடன் கூடிய பய­ணத்தை முன்­னெ­டுக்க முன்­னைய அர­சாங்கம் விரும்­ப­வில்லை. ஜன­நா­யகம், நல்­லி­ணக்கம் எவையும் சரி­யான முறையில் பாது­காக்­கப்­ப­ட­வில்லை. அதன் தாக்கம் மிகவும் மோச­மா­ன­தாக அமைந்­தது.

ஆனால் இப்­போது அவ்­வா­றான ஒரு நிலைமை இல்லை. கடந்த தேர்­தலின் பின்னர் நாட்டில் நல்ல மாற்­றங்கள் பல ஏற்­பட்­டுள்­ளன. ஜன­நா­ய­கத்தை மதிக்கும், நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்பும் இரண்டு தலை­வர்கள் இப்­போது நாட்டில் தலை­மை­யேற்று செயற்­ப­டு­கின்­றனர். அதேபோல் தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்கள் இணைந்த பய­ணத்தை மேற்­கொள்ள தயா­ராக இருப்­பதை கடந்த தேர்­தலின் போது மூவின மக்­களும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். அதேபோல் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்ப இப்­போது நல்­ல­தொரு வாய்ப்பு கிடைத்­துள்­ளது. வடக்கு,கிழக்கு,தெற்கு இணைந்த ஐக்­கிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்பி ஜன­நா­ய­கத்­தையும், நல்­லாட்­சி­யையும் உரு­வாக்க சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. மூவின மக்­களும் தமது மத நட­வ­டிக்­கை­க­ளையும், கலா­சா­ரத்­தையும் சுதந்­தி­ர­மாக பின்­பற்ற வாய்ப்பு கிடைத்­துள்­ளது. அதேபோல் ஒரு­வ­ரது கலா­சார மத விட­யங்­களில் ஏனைய இனத்­தவர் கலந்­து­கொள்ள வாய்ப்பும் கிடைத்­துள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் இணைந்து நாட்டில் தலை­மைப்­பொ­றுப்பை ஏற்­றுள்­ளன. அதேபோல் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் இணைந்து தமிழ் முஸ்லிம் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாக செயற்­பட வேண்டும். அவர்­களை பலப்­ப­டுத்தி நாட்டில் ஒற்­று­மையை கட்­டி­யெ­ழுப்ப எமது தேசிய அரசாங்கம் முன்னிற்கும்.

எனவே பழைய விடயங்களை மறந்து, கசப்பான சம்பவங்களை கடந்து ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பிரச்சினைகளை தீர்க்க பல வழிமுறைகள் உள்ளன. தீர்வும் மிக அருகாமையில் தான் உள்ளது. அவற்றை வெற்றிகொள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைய வேண்டும். பல்லின சமூகம் அமைதியாக வாழும் நாட்டை கட்டியெழுப்பி புதிய இலங்கையை உருவாக்க அனைவரினதும் ஒத்துழைப்பு வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment