31 October 2015

அர­சியல் தீர்வு - தமிழ்­மக்­களை ஒரு தேசிய இன­மாக அங்­கீ­க­ரிப்­ப­து

இனப்­பி­ரச்­சினை என்­பது ஒரு தேசிய இனம் அழிக்­கப்­ப­டு­வ­தனால் ஏற்­ப­டு­கின்ற பிரச்­சி­னையே. இதற்­கான தீர்வு தமிழ்­மக்­களை ஒரு தேசிய இன­மாக அங்­கீ­க­ரிப்­ப­தாக இருத்­தல்­வேண்டும். இது தவிர, வேறு எத்­தீர்வும் உண்­மை­யான தீர்­வாக அமை­ய­மாட்­டாது என அர­சியல் ஆய்­வாளர் சி.அ.யோதி­லிங்கம் குறிப்­பிட்டார். தேசிய நல்­லி­ணக்­கத்­திற்­கான மக்கள் இயக்கம் அர­சியல் தீர்வு பற்றி கொழும்பில் செவ்வாய் அன்று நடத்­திய கருத்­த­ரங்கில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
 
ஒரு­வரை பீடித்த நோய் என்ன என்­ப­தனை அறிந்­தால்தான் அந்த நோய்க்­கு­ரிய மருத்­து­வத்தை சிறப்­பாக மேற்­கொள்­ள­மு­டியும். அதே­போல இனப்­பி­ரச்­சினை என்றால் என்ன என்­ப­தனை நாம் தெளிவாக விளங்­கிக்­கொண்­டால்தான் அதற்­கான அர­சியல் தீர்­வையும் வலு­வாக எம்மால் முன்­வைக்­க­மு­டியும். மாக்­சிய மூல­வர்கள் நிலம், மொழி, கூட்­டு­வாழ்க்­கையை பேணக்­கூ­டிய பொரு­ளா­தாரம், கலா­சாரம் என்­ப­வற்றைக் கொண்ட மக்கள் கூட்­டத்தை ஒரு தேசிய இனம் என வரை­ய­றுத்­துள்­ளனர். அத்­தே­சிய இனத்­திற்கு தங்கள் தலை­வி­தியை தாங்­களே தீர்­மா­னிக்­கக்­கூ­டிய சுய­நிர்­ணய உரிமை உண்டு எனவும் கூறி­யுள்­ளனர். நாம் ஒரு தேசிய இன­மாக இருக்­கின்றோம் என்ற கூட்டு உணர்வு அல்­லது கூட்டுப் பிரக்­ஞைதான் தேசியம் என அழைக்­கப்­ப­டு­கி­றது.
 
தமிழ்­மக்கள் ஒரு தேசிய இன­மாக இருக்­கின்­றனர். இதனை சிலர் தேசம் என்றும் வரை­ய­றுப்­ப­துண்டு. இத­ன­டிப்­ப­டையில் தமிழ்­மக்­க­ளுக்கு தங்கள் தலை­வி­தியை தாங்­களே நிர்­ண­யிக்­கக்­கூ­டிய சுய­நிர்­ணய உரி­மையும் உண்டு. தமிழ்­மக்கள் தமிழ்த்­தே­சியம் என்ற தேசிய உணர்வால் பிணைக்­கப்­பட்­டுள்­ளனர். அதனை பல தட­வைகள் தெளிவாக வெளிப்­ப­டுத்­தியும் உள்­ளனர். அவர்­க­ளது வாக்­க­ளிப்பு முறையும் அதனை வலு­வாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.
 
தமிழ்த்­தே­சிய இனத்தின் தாங்கு தூண்­க­ளாக இருப்­பவை நிலம், மொழி, பொரு­ளா­தாரம், கலா­சாரம். அவை திட்­ட­மிட்டு சிதைக்­கப்­ப­டு­வ­துதான் இனப்­பி­ரச்­சி­னை­யாகும். மக்­கள்­கூட்­டத்­தையும், தேசி­ய ­இ­னத்தைத் தாங்கும் தூண்­களில் ஐந்­தா­வ­தாக கூறிக்­கொள்­ளலாம். தமிழ்­மக்­களின் இது­வ­ரை­கால போராட்டம் என்­பது தமிழ்த்­தே­சிய இனத்தின் தாங்கு தூண்­களை சிதைப்­ப­வர்­க­ளுக்கும், அதனை பாது­காக்க முற்­ப­டு­ப­வர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான போராட்­டமே. வளர்ச்­சி­நி­லையில் இப்­போ­ராட்டம் ஆயு­தப்­போ­ராட்­ட­மாக எழுச்­சி­ய­டைந்­தது. வல்­ல­ர­சு­களின் உத­வி­யுடன் இலங்கை அரசு ஆயு­தப்­போ­ராட்­டத்தை கொடூ­ர­மாக நசுக்­கி­யது என்­பது வர­லாறு. இலங்­கையை மையப்­ப­டுத்­திய புவிசார் அர­சியல் கார­ண­மாக உல­க­வல்­ல­ர­சு­களும், பிராந்­தி­ய­வல்­ல­ரசும் போராட்­டத்தை சிதைப்­பதற்கு துணை­போ­யி­ருந்­தன.
 
இலங்கை அர­சினால் ஆயு­தப்­போ­ராட்­டத்தை அழிக்­க­மு­டிந்­ததே தவிர, தமிழ்த்­தே­சிய அர­சி­யலை அழிக்க அதனால் முடி­ய­வில்லை. அதனை அழிக்­க­வேண்­டு­மானால், தமிழ்த்­தே­சிய இனத்தைத் தாங்கிப் பிடிக்­கின்ற தூண்­களை முழு­மை­யாகச் சிதைக்­க­வேண்டும். ஆயு­தப்போர் முடிந்­த­பின்னர் மஹிந்த அர­சாங்கம், இச்­சி­தைப்­பிற்­கான வேலைத்­திட்­டத்­தையே நகர்த்­தி­யி­ருந்­தது. போர் வெற்­றியை தமிழ்த் ­தே­சி­ய­ இ­னத்தை சிதைப்­ப­தற்கு வழங்­கப்­பட்ட லைசன்ஸ் என மஹிந்த அர­சாங்கம் கரு­தி­யது. மன்­ன­ராட்­சியில் போரில் ஒரு நாட்டை வெற்­றி­ கொண்ட மன்னர் அந்த நாட்டைப் பச்­சை­யாக சூறை­யா­டு­வது போல, ஒரு பச்­சைச்­சூ­றை­யாடல் தமி­ழர் ­தா­ய­கத்தில் இடம்­பெற்­றது. நிலங்கள் பறிக்­கப்­பட்டு, சிங்­க­ளக்­ கு­டி­யேற்­றங்கள் முடுக்­கி­வி­டப்­பட்­டன. ஆவ­ணங்­க­ளுடன் இருந்த சொந்த நிலங்கள் கூட இதற்கு விதி­வி­லக்­காக இருக்­க­வில்லை. நாமல் ராஜ
­பக்ஷ வவு­னி­யாவில் நாமல்­புர என்­ற­பெ­யரில் சிங்­க­ளக்­கு­டி­யேற்­றத்­தையே உரு­வாக்­கினார். ஆட்­சி­ மாற்றம் வந்­த­பின்­னரும், இந்த சிதைப்பு வேலைத்­திட்­டங்கள் நிறுத்­தப்­பட­வில்லை.
 
தமிழ்த் ­தே­சிய இனத்தின் தாங்கு தூண்கள் சிதைக்­கப்­ப­டு­வது தடுக்­கப்­ப­ட­வேண்­டு­மானால், முன்னர் கூறி­ய­து­போல தமிழ்­மக்கள் ஒரு தேசி­ய­ இ­ன­மாக அங்­கீ­க­ரிக்­கப்­படல் வேண்டும். இந்த அங்­கீ­காரம் கிடைத்­து­விட்டால் ஏனைய விட­யங்கள் எல்லாம் இல­கு­வா­கி­விடும். இனப்­பி­ரச்­சினைத் தீர்­வுக்­கான கோட்­பாட்டு அடிப்­படை இதுதான். தமிழ்த்­த­லை­வர்கள் 1985 ஆம் ஆண்டு திம்பு மாநாட்டில் அர­சியல் தீர்­வுக்­கான கோட்­பாட்டு அடிப்­ப­டையை முன்­வைத்­தி­ருந்­தனர். தமிழ்­மக்கள் ஒரு தேசிய இனம், வட­கி­ழக்கு தமிழ் ­மக்­க­ளி­னு­டைய பாரம்­ப­ரியப் பிர­தேசம், தமிழ்­மக்­க­ளுக்கு சுய­நிர்­ணய உரி­மை­யுண்டு. என­கின்ற கோட்­பாட்டு அடிப்­ப­டைகள் மாநாட்டில் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.
 
இவை தவிர, இலங்கை அரச அதி­கா­ரக்­கட்­ட­மைப்பும், பன்­மைத்­தன்­மை­யா­ன­தாக மாற்­றப்­படல் வேண்டும். தமிழ்த் ­தே­சி­ய ­இனம், சிங்­க­ளத் ­தே­சி­ய­ இனம், மலை­ய­கத் ­தே­சி­ய­ இனம், முஸ்­லிம் ­தே­சி­ய­ இனம் ஆகி­யவை சமத்­து­வ­மாக இணைக்­கப்­பட்ட அர­ச­ அ­தி­கா­ரக்­கட்­ட­மைப்பு ஒன்று உரு­வாக்­கப்­படல் வேண்டும். இன்று இலங்­கைத் ­தே­சியம் என ஒன்­றில்லை. சிங்­க­ளத்­தே­சியம், தமிழ்த் ­தே­சியம், மலை­ய­கத்­தே­சியம், முஸ்லிம் தேசியம் என்­ப­வையே நடை­மு­றையில் உள்­ளன. பன்­மைத்­தன்­மை­யான அரச அதி­கா­ரக்­கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­கின்ற போதே இலங்­கைத் ­தே­சி­யத்­தையும் கட்­டி­யெ­ழுப்­ப­மு­டியும். தற்­போ­துள்ள அரசு என்­பது அனைத்து இனங்­க­ளையும் பிர­தி­ப­லிக்கும் அரசு அல்ல. மாறாக சிங்­க­ளத் ­தே­சி­ய­ இ­னத்தை மட்டும் பிர­தி­ப­லிக்­கின்ற அர­சே­யாகும். தேசிய இனங்கள் தனி­யான நலன்­களை தனி­யா­கவும், கூட்­டான நலன்­களை கூட்­டா­கவும் பேணக்­கூடிய ஒரு கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வது இலங்­கைத்­தே­சி­யத்­திற்கு அவ­சி­ய­மா­ன­தாகும். 
 
பேரா­சி­ரியர் சிவத்­தம்பி குறிப்­பிட்­டது போல தமிழ்­மக்கள் தமி­ழ­னா­கவும், இலங்­கை­ய­னா­கவும் வாழ­வி­ரும்­பு­கின்­றனர். இங்கு இலங்­கை­ய­னாக இருப்­ப­தற்கு முதல் நிபந்­தனை தமி­ழ­னாக இருப்­பதை அங்­கீ­க­ரிப்­பதே. இவை அர­சியல் தீர்­விற்­கான கோட்­பாட்டு அடிப்­ப­டைகள்.
 
அர­சியல் தீர்வின் நடை­மு­றை­வ­டிவம் நான்கு விட­யங்­களை பிர­தா­ன­மாக உள்­ள­டக்­கி­ய­தாக இருத்தல் வேண்டும். அதி­கா­ர­அ­லகு, சுய­நிர்­ண­ய­உ­ரி­மையைப் பிர­யோ­கிக்­கக்­கூ­டிய அதி­கா­ரங்கள், ஏனைய இனங்­க­ளுடன் கூட்­டு­வாழ்க்­கையை பிர­யோ­கிக்­கக்­கூ­டிய வகையில் மத்­தி­ய­அ­ர­சில்­பங்கு, வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­க­ளுக்­கான பாது­காப்பு என்­ப­வையே இந்­நான்­கு­மாகும்.
 
தமிழ்­மக்­க­ளுக்­கான அதி­கார அலகு வடக்கு - கிழக்கு இணைந்த அல­காக இருத்தல் வேண்டும். தமிழ்­மக்கள் தங்­க­ளது கூட்­டி­ருப்­பையும், கூட்­டு­ரி­மை­யையும் பேணு­வ­தற்கு இவ்­வி­ணைந்த அதி­கார அலகு மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும். இதில் முஸ்­லிம்­ மக்­க­ளி­னு­டைய நிலை எவ்­வாறு இருக்­க­வேண்டும் என்­பது தொடர்­பாக அவர்­க­ளுடன் பேசித்­தீர்க்­கலாம். முஸ்­லிம் ­மக்கள் உடன்­ப­டா­விட்டால் கிழக்கில் தமிழ் ­மக்கள் வாழ்­கின்ற பிர­தே­சங்­களை வடக்­குடன் இணைத்­தா­வது இவ்­வ­தி­கா­ர­அ­லகு உரு­வாக்­கப்­ப­டல்­வேண்டும். இதில் எந்­த­வித விட்­டுக்­கொ­டுப்­பிற்கும் இட­மி­ருக்­க­கூ­டாது.
 
சுய­நிர்­ண­ய­மு­டைய அதி­கா­ரங்­களைப் பொறுத்­த­வரை தமிழ்­மக்கள் தங்­க­ளி­னு­டைய தலை­வி­தியை தாங்­களே நிர்­ண­யிக்­கக்­கூ­டிய வகை­யி­லான அதி­கா­ரங்­க­ளாக அவை இருத்­தல்­வேண்டும். அதி­கா­ரங்­க­ளுக்­கான பிர­தான அழுத்தி தமிழ்­மக்­க­ளி­டமே இருக்­க­வேண்டும். முப்­பது வருட ஆயு­தப்போர் கார­ண­மாக தமிழ்­மக்கள் ஐம்­பது வரு­டங்­க­ளுக்கு மேல் பின்­தங்­கி­யுள்­ளனர். தென்­னி­லங்­கையில் உள்­ள­வர்­க­ளுக்கு சம­மாக தமிழ்­மக்­களை கொண்­டு­வ­ரு­வ­தற்கு அதி­க­ள­வி­லான அதி­கா­ரங்கள் அவர்­க­ளுக்கு தேவை­யா­ன­தாக உள்­ளது.
 
பன்­மைத்­தன்­மை­யான அதி­கா­ரக்­கட்­ட­மைப்பு என்­பது கூட்­டுப்­ப­கிர்வு என்ற தத்­து­வத்தை உள்­ள­டக்­கி­யது. இத­ன­டிப்­ப­டையில் மத்­தி­ய­அ­ர­சாங்­கத்தில் தமிழ்­மக்கள் ஒரு தேசி­ய­ இ­ன­மாகப் பங்­கு­பற்­று­வ­தற்­கு­ரிய வாய்ப்பு வழங்­கப்­ப­டல்­வேண்டும். குறிப்­பாக தமிழ்­மக்கள் தொடர்­பான விவ­கா­ரங்­களைப் பொறுத்தவரை அவர்களிடம் வீட்டோ அதிகாரம் இருத்தல்வேண்டும். பல நாடுகள் இதற்காக இரட்டைவாக்கெடுப்பு முறையை சிபார்சு செய்துள்ளன.
 
தமிழ்மக்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டால் மட்டும் போதாது. வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கான பாதுகாப்பும் இருத்தல்வேண்டும். அதிகாரங்களைப் பொறுத்தவரை ஒரு கையால் கொடுத்து, மறுகையால் பறிக்கும் வரலாற்று அனுபவமே தமிழ்மக்களிடம் உள்ளது. சோல்பரி யாப்பின் 29வது பிரிவு தொடக்கம், 13வது திருத்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைவரை இவை பற்றி நிறையவே அனுபவங்கள் உண்டு. நீதித்துறை தமிழ்மக்களைப் பாதுகாக்கும் என நம்புவதற்கில்லை. இலங்கை அரசின் அனைத்து அரச இயந்திரங்களுமே பேரினவாத மயமாக்கப்பட்ட நிலையில் நீதித்துறையும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. முன்னரே கூறியதுபோல பிரதான அழுத்தி தமிழ்மக்களின் கைகளில் இருக்கும்போதே இவற்றை சாத்தியமாக்கமுடியும்.
 
அரசியல் தீர்விற்காக அக்கறையுடன் உழைக்கும் சக்திகள் இனப்பிரச்சினைத் தீர்விற்கான மேற்கூறிய கோட்பாட்டு அடிப்படைகளையும் நடைமுறை வடிவங்களையும் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியமானதாகும்.

அர­சியல் ஆய்­வாளர் - சி.அ.யோதி­லிங்கம்

நன்றி- வீரகேசரி

 
 

No comments:

Post a Comment