04 January 2016

புதிய போராட்டங்களுக்குக் கட்டியம் கூறும் புத்தாண்டு

2015ஆம் ஆண்டு பாஜகவின் ஆட்சி யின் கீழ் பல்வேறு முரண் பாடுகள் கூர்மைப் படுத்தப்பட்டதைப் பார்த்தது. மோடி அரசாங்கத்தின் ஆசியுடன் நவீன தாராளமயக் கொள்கைகளின் கீழும், அரக்கத்தனமான மதவெறித் தாக்கு தல்கள் மூலமும் வலதுசாரித் தாக்குதல் ஆண்டு முழுதும் நடைபெற்றது. இவர்களின் தாக்குதல்களுக்கு எதிராக அவற்றை எதிர்த்துத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளும் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் 2015ஆம் ஆண்டு கண்டது.

பொருளாதார மந்தம் தொடர்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ழுனுஞ)யின்வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என்று அரசாங்கம் மதிப்பிட்டிருந்தபோதிலும், அவ்வாறில் லாமல் 2015-16இல் முதல் அரையாண் டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி7.2 சதவீதம் மட்டுமே என்று அரையாண் டிற்காக மேற்கொள்ளப் பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. இதில் மிகவும் கவலைப்பட வேண்டிய அம்சம் என்னவெனில், மக்க ளின் வருமான வளர்ச்சி விகிதம் 2014-16ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2015-16ஆம் ஆண்டில் முதல் பாதி யில், கிட்டத்தட்ட பாதியாகக் குறைந் திருக்கிறது என்பதாகும்.

அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை

வேளாண்துறையில் வருமானம் இந்த ஆண்டு எதிர்மறை வளர்ச்சியையே பதிவுசெய்யும். இதன் விளைவாக, 2015ஆம்ஆண்டில் வேலையில்லாத் திண்டாட் டம் கணிசமான அளவிற்கு அதிகரித் திருக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருள்களான வெங்காயம், பருப்பு வகைகள், காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப் பதன் விளைவாக சாமானிய மக்களின் வாழ்க்கை கடும் சிரமத்திற்குள்ளாகி இருப்பது எவ்விதத்திலும் குறைவதற் கான வாய்ப்பே இல்லை.2015-16ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டானது அரசாங்கத்தின் பெரும்வர்த்தகர் சார்பு, பணக்காரர் சார்பு குணத்தை உறுதிப்படுத்தியுள்ளதுகார்ப்பரேட் வரிகள் குறைக்கப்பட்டிருப் பது, அந்நிய மூலதனத்திற்கு மேலும் சலுகைகள் அளித்திருப்பது என ஒரு பக்கம் தொடரக்கூடிய அதே சமயத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்திற்கு (ஐஊனுளு), சுகாதாரம் மற்றும் கல்விமுதலானவற்றிற்கான பொதுச் செல வினங்களை வெட்டிக் குறைத்திருப்பதும் நடந்துள்ளது. நாடு கடும் விவசாய நெருக்கடியைச்சந்தித்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் உள்ள 29 மாநிலங்களில் 18 மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன. மகாராஷ்டிராவில் மட்டும், ஜனவரிக்கும் அக்டோபருக்கும் இடையில், 2580 விவசாயிகள் தற் கொலை செய்துகொண்டுள்ளனர். இது 2001லிருந்து பார்க்கும்போது அதிகஎண்ணிக்கையாகும். ஆயினும், மோடி அரசாங்கம் விவசாயிகளின் துயரினைத் துடைத்திட எந்தவிதமான நடவடிக்கை யையும் எடுத் திடவில்லை. விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (ஆளுஞ) உயர்த்திடவில்லை. கிராமப் புறங்களில் அவலநிலை நீடிக்கக் கூடிய இத்தருணத்தில் கிராமப்புற மக்களுக்கு மகாத்மாகாந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை அளிப்பது மிகவும் அவசியத்தேவை யாகும். ஆனால் மோடி அரசாங்கமோ மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான ஒதுக் கீட்டை கடுமையாக வெட்டிக் குறைத் திருக்கிறது. மோடி அரசின் முதல் தோல்விஇத்தகைய பயங்கரமான சூழ்நிலை மையில்தான் மோடி அரசாங்கம், கார்ப் பரேட்டுகள் மற்றும் ரியல் எஸ்டேட் பேர்வழிகளின் நலன்களுக்கு சேவகம் செய்வதற்காக, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மீது கொடூர மான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. 2013ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்திட வேண்டும் என்று கோரியது. இச்சட்டத்தைத் திருத்துவதற்காக அரசாங்கம், ஒருமுறை அல்ல, இரு முறை அல்ல, மூன்று முறை அவசரச் சட்டத்தை நிறைவேற்றும் அளவிற்குச் சென்றது. ஆகையால், பாஜக அரசாங்கத்திற்கு எதிராகக் கூர்மையடைந்த முதல் முரண் பாடு என்பது, இந்த அரசாங்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையிலானதாகும். நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் எதிர்ப்பியக்கம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் இதனை எதிர்த்தன. இவற்றின் விளை வாக மோடி அரசாங்கம் தன்னுடைய நிலைப் பாட்டிலிருந்து பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவசரச் சட்டத்தைக் காலாவதியாகிட அனுமதித்தது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் சந்தித்த மிகப்பெரிய முதல் தோல்வி இது வாகும். இரண்டாவது முரண்பாடு, இந்த அரசாங்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத் திற்கும் இடையிலானதாகும். அரசாங்கம், நாட்டில் உள்ள தொழிலாளர் நலச் சட்டங் களை தொழிலாளர் விரோதச் சட்டங் களாக மாற்றக்கூடிய அளவிற்கு நடவடிக் கைகளை எடுத்தது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற சில பாஜக மாநில அரசாங்கங்கள் ஏற்கனவே தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி, தொழிலாளர்களின் உரிமை களை வெட்டிக்குறைத்து, முதலாளி களின் கை ஓங்கும்படிச் செய்திருக்கின் றன. தொழிலாளர்கள் மற்றும் தொழிற் சங்க உரிமைகளுக்கு எதிரான இத் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் நீண்ட நெடிய போராட்டம் தொடங்கி இருக்கிறது.

15 கோடிப்பேர் பங்கேற்ற செப்.2 வேலைநிறுத்தம்

மத்தியத் தொழிற்சங்கங்களின் அறை கூவலுக் கிணங்க செப்டம்பர் 2 அன்று நடைபெற்ற பொது வேலை நிறுத்தம் 15 கோடி தொழிலாளர்களும், ஊழியர்களும் பங்கேற்றதைப் பார்த்தது. இது, நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகசமீப காலங்களில் நடைபெற்ற தொழி லாளி வர்க்கத்தின் மிகப் பெரிய எதிர்ப்பு நடவடிக்கையாக இருந்தது. 2015ஆம் ஆண்டில் வலதுசாரித் தாக்குதலின் மற்றொரு அம்சம், மதவெறி சக்திகளின் அரக்கத்தனமான நடவடிக்கைகளாகும்.

ஆர்எஸ்எஸ் தலைமையின்கீழ் இயங்கும் அமைப்புகள், சிறுபான்மையினரைக் குறி வைத்து பதற்றங்களை உருவாக்குவதற்கு, பசுவதைப்பிரச்சனையையும் மாட்டுக் கறிக்குத் தடைவிதித்திருப்பதையும் பயன்படுத்திக் கொண்டன. இப்பிரச்சனை தொடர்பாக சிறுபான்மையினருக்கு எதிரான விஷமத் தனமான பிரச்சாரம், செப்டம்பர் 30 அன்று உத்தரப்பிரதேசம் தாத்ரி என்னுமிடத்தில் முகமது இக்லாக் என்பவரைக் கொடூர மான முறையில் கொல்வதற்கு இட்டுச் சென்றது. பாஜக அரசாங்கம், கல்வி முறையிலும், கலாச்சாரக் கொள்கைகளிலும் மத வெறிக் கருத்துக்களைத் திணிப்பதற் கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்துத்துவா அமைப்புகள், மதச்சார்பற்ற மற்றும்முற்போக்கு மாண்புகளை உயர்த்திப் பிடித்து, மதவெறி சித்தாந்தங்களை எதிர்த்து வரும் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு எதிராகத் தங்களுடைய விஷமத்தனமான பிரச்சாரங்களை முடுக்கி விட்டிருக் கின்றன. இவற்றின் விளைவாக, பிப்ரவரியில் கோவிந்த் பன்சாரே மற்றும் ஆகஸ்டில் பேராசிரியர் கல்புர்கி ஆகிய இரு அறிவுஜீவிகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவங்கள் 2015 இல் நடைபெற்றன.

எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் கொந்தளிப்பு

பேச்சுரிமை, கருத்துரிமை மற்றும்பல்வேறுவிதமான கலாச்சாரங்களின் மீதும் தொடுக்கப் பட்ட இத்தாக்கு தல்களுக்கு எதிராக நாட்டில் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள்மிகப்பெரிய அளவில் கொதித் தெழுந்ததையும் 2015 சந்தித்தது. நாட்டில் பல்வேறு மொழிகளிலும் எழுதி வந்த எழுத்தாளர்கள், இந்நடவடிக்கைகளுக்கு எதிராகத் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்ததுடன், தாங்கள் பெற்ற விருது களையும் அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைத்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, சகிப்புத்தன்மையற்ற இத்தகையத் தாக்கு தல்களுக்கு எதிராக வரலாற்றறிஞர்கள், சமூக விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு அறிக்கைகள் வெளியிட்டார்கள். நாட்டில் உள்ள உயர் விஞ்ஞானிகள் உட்பட 600 விஞ்ஞானிகள் அறிவியல்பூர்வமான சிந்தனையையும், பகுத்தறிவையும் பாதுகாத்திட முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இவ்வாறு மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகளுக்கும், இந்துத்துவா மதவெறி சக்திகளுக்கும் இடையிலான போராட்டம் உக்கிரம் அடைந்துகொண்டிருக்கிறது. அமெரிக்காவிடம் சரணடைந்தது2015ஆம் ஆண்டு, மோடி அரசாங்கம்அமெரிக்காவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதை வலுப்படுத்திக்கொண்டிருப் பதையும் பார்த்தது. ஜனவரியில் ஒபாமாவின் இந்திய விஜயம் இதனைத் தொடங்கி வைத்தது. ஆசிய-பசிபிக் போர்த்தந்திர நடவடிக்கைகளில் அமெரிக்காவின் இளைய பங்காளி யாகக்கூடிய முறையிலான கூட்டறிக் கையில் இந்தியா கையெழுத்திட்டது. மேலும் ஒபாமா வருகையின்போது, இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு கட் டமைப்பு ஒப்பந்தத்தை மேலும் பத்தாண்டுகளுக்கு புதுப்பித்து, அறிவிப்பு வந்ததையும் 2015ஆம் ஆண்டு கண்டது. அமெரிக்காவின் கட்டளைப்படி, ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான முத்தரப்புக் கூட்டணியிலும் இந்தியா இணைந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் கீழ் முழுமையான முறையில் ராணுவ மற்றும் போர்த்தந்திரக் கூட்டணியாக இந்திய அரசாங்கம் மாறுவது என்பது இந்தியாவின் அயல்துறைக் கொள்கை மற்றும் உள்நாட்டுக் கொள்கைகளிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.

நை ரோபியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் முழுமையாகச் சரண் அடைந்ததும், பாரீசில் நடை பெற்ற காலநிலை உச்சிமாநாட்டில் ஊசலாட்டத்துடன் நிலை எடுத்ததும் இவ்வாறு அமெரிக்காவின் இளைய பங் காளியானதன் விளைவேயாகும். சென்ற ஆண்டு முழுதும் பாகிஸ் தானுடன் மோதல் போக்கையே பின்பற்றி வந்த இந்திய அரசாங்கம், திடீரென்று ஆண்டின் இறுதியில், ஒருங்கி ணைந்த பேச்சுவார்த்தைக்கு ஒத்துக் கொண்டிருக்கிறது. எதார்த்த நிலைமைகளும் அமெரிக்காவின் நிர்ப்பந்தமுமே இத்தகைய மாற்றத்தினை இந்திய அரசாங்கத்திடம் கொண்டுவந்திருக் கிறது.

தில்லி, பீகார் படுதோல்வி

பொருளாதாரக் கஷ்டங்களும், ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தின் மதவெறி நிகழ்ச்சி நிரலும் ஆளும் கட்சிக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளியை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்புஉருவாகியிருந்த “மோடி அலை’’ 2015ஆம் ஆண்டில் தணியத் தொடங்கி விட்டது. நாடாளுமன்ற மக்களவைக் கான தேர்தல் நடைபெற்ற சமயத்தில், “வளர்ச்சி’’ குறித்தும், குறிப்பாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு களுக்கு உறுதிமொழிகளை அள்ளிவீசியதைத் தொடர்ந்தும், மக்களி டமிருந்து நரேந்திர மோடியும் பாஜகவும் விரிவான அளவில் ஆதரவினைப் பெற்றிருந்தனர்.

மோடி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு அடைந்த 2015 மே மாதத்தில், மக்கள்தங்களின் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனதைக் கண்டார்கள். இது பிப்ர வரியில் நடைபெற்ற தில்லி சட்டமன்றத் தேர்தலிலும், நவம்பரில் பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் நன்கு பிரதிபலித்தது. இவ்விரு மாநிலங்க ளிலும் பாஜக படுதோல்வியைச் சந்தித் தது.இந்த ஆண்டில் இன்னும் ஒருசில மாதங்களுக்குள் மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அஸ்சாம் மாநிலங்கள் சட்ட மன்றத் தேர்தல்களை எதிர்கொள்ளவிருக்கின்றன.

மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடதுசாரிகளுக்கும், அவர்களுடைய பாரம்பரிய வலுவான மாநிலங்களான, மேற்குவங்கத்திலும் கேரளாவிலும் நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவைகளா கும். முக்கியமான இத்தேர்தல் களத்திற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.தொழிலாளர் வர்க்கத்தின் புதிய போராட்டங்களையும், தங்களின் வாழ் வாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதற் கான வெகுஜன இயக்கங்களையும், மதச் சார்பின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களையும் புதிய ஆண்டு சந் திக்க இருக்கிறது.

வர்க்க மற்றும் சமூக முரண்பாடுகள் கூர்மையடைந்திருப்பது 2016 ஆம் ஆண்டை பாஜகவிற்கும் அதன்இந்துத்துவா பரிவாரங்களுக்கும் மிகவும்அமைதியற்ற ஆண்டாக மாற்றி அமைத் திடும்.

(தமிழில்: ச.வீரமணி)    


நன்றி- தேனீ

No comments:

Post a Comment