10 February 2016

தரம் ஒன்றுக்கான ஆசிரியர் கையேடு வழங்கப்படவில்லை

இந்த வருடத்தில் தரம் ஒன்றுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்ட பரிந்துரைக்குரிய புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சிகளும் இதுவரை ஆசிரியர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
தரம் ஒன்றுக்காக இந்த வருடம் முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டிய ஜோசப் ஸ்டாலின் பாடவிதானங்களில் பத்து வருடகாலத்திற்கு ஒருதடவை முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்புகளுக்கு அமைவாக 2016 ஆம் ஆண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தரம் ஒன்றிற்காக வருடாந்தம் சுமார் மூன்று இலட்சம் பிள்ளைகள் சேர்த்துக்கொள்ளப்படும் நிலையில், ஆசிரியர் கையேடுகள் விநியோகிக்கப்படாமை பாரிய பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளதாக  கூறினார்.
கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும்போது அதற்கான அனைத்து முன்னாயத்தங்களும் டிசம்பர் மாத்த்திற்குள் நிறைவுசெய்யப்பட்ட பின்னரே, புதிய கல்வித் திட்டங்கள் வருடத்தின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும்  தெரிவித்தார்.

No comments:

Post a Comment