17 February 2016

மக்களின் அங்கீகாரமின்றி வடக்கு,- கிழக்கை இணைக்கக்கூடாது


  வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­பது அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஒரு விட­ய­மாக தமிழ் மக்கள் பேரவை   பேசிக்­கொண்­டி­ருக்­கி­றது. கிழக்கு கிழக்­கா­கவே இருக்க வேண்டும். கிழக்கு மாகாண மக்­களின் அங்­கீ­கா­ர­மின்றி வடக்கு, கிழக்கை இணைக்கக் கூடாது என்­பதை புதிய                           அர­சி­யலமைப்புத் திருத்­தத்­திற்கு முன்மொழிய வேண்டும் என பேரா­சி­ரியர் எம்.ஏ.எம்.சித்தீக் 
கல்­முனை அபி­வி­ருத்­திக்கும் முகா­மைத்­­து­வத்­துக்­கு­மான சபை ஏற்­பாடு செய்­தி­ருந்த இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்தம் கலந்துரையாடலின் போதுஉரையாற்றுகையில் தெரிவித்தார்.

டாக்டர் எம்.ஏ.சித்தீக் மேலும் உரை­யாற்­று­கையில்  தமிழர் பேர­வையின் வரை­விலே அவர்கள் முஸ்­லிம்­களை அரசியல் குழு­மங்­க­ளாகக் கணித்து முஸ்­லிம்கள் முன்­வைக்­கின்ற ஆலோ­ச­னை­களை ஏற்றுக் கொண்டு கலந்­தா­லோ­சிக்க முடியும் என்று குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்கள். ஆனால் முஸ்லிம் அர­சியல் வாதி­க­ளிடம் இருக்­கின்ற ஒற்­று­மை­யின்மை மிகவும் வெட்­கப்­படக் கூடிய ஒன்­றாக இருப்­பதைக் காண்­கின்றோம்.

கிழக்கு மாகாண முஸ்­லிம்­க­ளி­டையே இருக்­கின்ற பிர­தே­ச­வாதம் எங்­க­ளுக்கு மிகவும் இழி­வான நிலையை ஏற்­ப­டுத்தும் என நினைக்­கின்றேன். காரணம் கல்­முனை மாந­கர சபை விட­யத்தில் கூட சாய்ந்­த­ம­ருது பிரிந்துபோக ­வேண்டும்.

மரு­த­முனை பிரிந்து போக வேண்டும் என்ற வாதம் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. இது ஆரோக்­கி­ய­மான விடய­மல்ல. தமிழ் மக்­க­ளிடம் வடக்குத் தமிழர், கிழக்குத் தமிழர் என்ற பிரி­வினை இருந்­தாலும் வடக்கு, கிழக்கு தமி­ழர்­களின் தாயகம் என்­பதில் அவர்கள் ஒற்­று­மைப்­பட்டு உறு­தி­யாக இருக்­கின்­றார்கள். ஆனால் கல்­முனை மாந­கர­சபை விட­யத்தில் கூட முஸ்­லிம்கள் ஒற்­று­மைப்­பட முடி­யாத நிலை இருக்­கின்­றது. இதனால் கல்­முனை மாந­க­ரத்தின் ஆட்­சியை நாங்கள் இழக்­கக்­கூ­டிய சந்­தர்ப்பம் இருக்­கின்­றது. இவ்­வா­றான போக்கு முஸ்லிம் சமூ­கத்தில் இருக்கும் வரை அர­சி­ய­லிலே அதிக இழப்­புக்கள் ஏற்­ப­டு­வதை தவிர்க்க முடி­யாது.

எனவே முஸ்லிம் சமூ­கத்தில் ஒற்­றுமை ஏற்­பட வேண்டும் அந்த ஒற்­றுமை அர­சியல் வாதி­க­ளிடம் பிர­தி­ப­லிக்க வேண்டும். இல்­லையேல் வட.,­கி­ழக்கு இணைந்தால் முஸ்லிம் சமூகம் பின்­தள்­ளப்­படும் என்ற அச்சம் இருக்­கின்­றது என்றார்.

நிகழ்வின் இறு­தியில் பின்­வரும் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன

1. புதிய அர­சியல் யாப்பும் முஸ்­லிம்­களும். என்ற விடயம் தொடர்பில் முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் இது­வரை எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் வெளிப்­ப­டை­யாக மேற்­கொண்­ட­தாகத் தெரி­ய­வ­ர­வில்லை. ஏனைய சிறு­பான்மை சமூ­கங்­களைச் சார்ந்த கட்­சிகள் இதற்­காக சிவில் அமைப்­புக்­களின் உறுப்­பி­னர்­க­ளையும் துறை­சார்ந்த நிபு­ணர்­க­ளையும் கொண்ட குழுக்­களை அமைத்து தமக்­கான முன்­மொ­ழி­வு­களை வரை­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­ட­வரும் இச்­சந்­தர்ப்­பத்தில், முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் தொடர்ந்தும் மௌனம் சாதித்­து­வ­ரு­வ­தா­னது மக்கள் அவர்­க­ளுக்கு வழங்­கிய ஆணையை மீறும் செயல் என்­பதை இச்­சபை வருத்­தத்­துடன் தெரி­விக்­கி­ன­றது.
2. முஸ்லிம் அர­சியல் கட்­சிகள், கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் தொடர்பில் எத்­த­கைய தீர்­மா­ணங்­களை எடுக்கும் சந்­தர்ப்­பத்­திலும் அம்­மா­காண முஸ்லிம் சிவில் அமைப்­புக்­க­ளி­னதும், புல­மை­யா­ளர்­க­ளி­னதும் ஆலோ­ச­னை­களை அவ­சியம் பெற்றுக் கொள்­ளுதல் வேண்டும்.
3. கிழக்கு மாகாணம், வர­லாறு நெடு­கிலும் இருந்­தது போல தனது தனித்­து­வ­மான இயல்­பையும் இயற்­கை­யையும், சமய, கலை, கலா­சார விழு­வி­யங்­க­ளையும் பேணும் வண்ணம் தொடர்ந்தும் தனி­யான ஒரு மாகா­ண­மா­கவே இருத்தல் வேண்டும்.

4. கிழக்கு மாகா­ணத்தின் எல்­லைகள் 1978 ஆம் ஆண்டின் யாப்­பிற்­க­மைய உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

5. நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­பதி முறை­மையை முற்­றாக ஒழித்­து­வி­டாமல் அர­சியல் யாப்பின் 19 ஆவது திருத்­தத்­திற்­க­மைய ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் வரை­ய­றுக்­கப்­பட வேண்டும்.

6. கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை உறு­திப்­ப­டுத்தும் நோக்கில் கிழக்கிலங்கை முஸ்லிம் மஜ்லிஸ் என்ற பெயரில் புதியதொரு அமைப்பு உருவாக்கப்படும். அதில் கிழக்கு மாகாணத்தின் சகல பிரதேசங்களையும் சார்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்வாங்கப்படுவர். 

7. உத்தேச அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்களை திரட்டும் குழுவினரின் அம்பாறை மாவட்டத்திற்கான பெப்ரவரி 27, 29 ஆம் திகதி களின் அமர்வுகள் கரையோர பிரதேச இடங்களிலும் நடத்தப்படல் வேண்டும்.

பேரா­சி­ரியர் சித்தீக் 

No comments:

Post a Comment