27 February 2016

ஆடைக் கட்டுப்பாடு வாபஸ்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு மாணவர்களிடையே கலாசாரப் பண்பாடுகளைப் பேணுவதற்காக விடுக்கப்பட்டிருந்த அறிவித்தல் விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாக   கலைப்பீடத்தின் பதில் பீடாதிபதி பேராசிரியர் வேதநாதன் தெரிவித்துள்ளார்.
17.02.2016 ஆம் திகதியன்று கல்விசார் உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களுக்கான உடைகள் பற்றிய ஒழுங்குகள் என்ற தலைப்பில் கலைப்பீடாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட உள்ளக அறிவித்தல் ரத்துச் செய்யப்பட்டு வாபஸ் பெறப்படுகின்றது என பேராசிரியர் வேதநாதன் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் கல்வி அலகுகளின் இணைப்பாளர்கள் ஆகியோருக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கின்றது.
டீசேட் அணியக்கூடாது, சீராக முகச்சவரம் செய்து வரவேண்டும், வெள்ளிக்கிழமைகளில் மாணவிகள் சேலை அணிந்து வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல விடயங்கள் முன்னைய உடை பற்றிய ஒழுங்கு அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது மாணவர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததை அடுத்தே அந்த உடை பற்றிய ஒழுங்குகள் விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாக கலைப்பீடத்தின் பதில் பீடாதிபதி விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

No comments:

Post a Comment