27 February 2016

தமிழ் கைதிகள் உண்ணாவிரதம் - சட்டமா அதிபருக்கு அறிவிப்பு

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு விபரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.
இந்த கைதிகளின் விடயம் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் சிலர் வழக்கு விசாரணைகளை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவர்கள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் கூறினார்.
ஏனையோர் தொடர்பிலும் விரைவான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆயினும், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிமை முதல் அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் கைதிகளில் இருவர் 6 ஆவது நாளாகவும், கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் 14 பேர் 5 ஆவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment