17 February 2016

வடக்கு, -தெற்கின் உறவுப்பாலமாக திகழுங்கள்

வட­ப­குதி தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கும் சிறந்த தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுத்து அம்­மக்­களின் நல்­வாழ்­விற்கு செயல்­பட வேண்­டிய பாரிய பொறுப்பு புதிய ஆளு­ந­ராக பத­வி­யேற்­றுள்ள தங்­க­ளுக்­குள்­ளது.

தாங்கள் சிறந்த சேவை­களை பெற்­றுக்­கொ­டுத்து வடக்கு, தெற்கு மக்­களின் நல்­லு­ற­விற்கும் ஐக்­கி­யத்­திற்கும் பால­மாக திகழ வேண்டும். தங்­க­ளுக்கு மும் மணி­களின் ஆசி­களும் கிட்­ட­வாழ்த்­து­கிறோம் என கண்டி மல்­வத்த பெளத்த பீட மா­நா­யக்க தேரர் திப்­பட்­டு­வாவே ஸ்ரீ சுமங்­கள, அஸ்­கி­ரிய பீடா­தி­பதி மகா­நா­ய­க­தேரர் கல­கம ஸ்ரீ அத்­த­தஸ்ஸி ஆகியோர் கூறி ஆசீர்­வ­தித்­துள்­ளனர்.

வட­மா­கா­ணத்­திற்கு ஆளு­ந­ராக ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட ஆளுநர் ரெஜினோல்ட் குரே பத­வி­யேற்றுக் கொண்ட பின்னர் நேற்றுக் காலை கண்­டிக்கு விஜயம் செய்­த­துடன் தலதா மாளி­கைக்குச் சென்று வழிப்­பட்டார்.

பின்னர் அவர் மல்­வத்த அஸ்­கி­ரிய பீடா­தி­ப­தி­க­ளான மகாநாயக்க தேரர்களை சந்தித்த போதே மகாநாயக்க தேரர்கள் மேற்கண்டவாறு தெரிவித்து ஆசீர்வதித்துள்ளனர்.

No comments:

Post a Comment