24 February 2016

அரசியலமைப்பு தொடர்பான விடயங்களை குழப்ப வேண்டாம்

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது குறித்த பிரேரணை மீதான விவாதத்தின் போது அரச தரப்புக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் ஏற்பட்ட விவாதத்தினை தொடர்ந்து கருத்துத் தெரிவித்த எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் புதிய அரசியலமைப்பு ஊடாக இனப்பிரச்சினைக்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. அத்துடன் நிறைவேற்று அதிகார முறைமையினை நீக்குதல், புதிய தேர்தல் முறை உருவாக்கம் போன்ற விடயங்களில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. எனவே இதனை யாரும் குழப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். 

மேலும் அவர் கூறுகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக நாம் இங்கு விவாதித்துக் கொண்டிருக்கிறோம். 1978ம் ஆண்டு அரசியலமைப்பை கைவிட வேண்டும். அவ்வமைப்பில் காணப்படும் பல விடயங்கள் ஏற்புடையனவல்ல.  ஆகையால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்று அனைவராலும் ஏற்றுக்கொள்ள ப்பட்டுள்ளதோடு     அதற்கான இணக்கப்பாடும் காணப்பட்டுள்ளது. 

இதன் போது ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி  குறிப்பிடுகையில் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்து ஒருவருடமான நிலையில் கடந்த ஜனவரி மாதம் 09ம் திகதி பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றியமைப்பது குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு ஜனவரி 12ம் திகதி அப்பிரேரணை மீதான விவாதம் நடத்தப்பட்டது. பின்பு ஒத்திவைக்கப்பட்டு 25ம் திகதி மீண்டும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்கள். ஆனால் திடீரென்று ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினார். 

நிறைவேற்று அதிகாரங்களை குறைத்தல், இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டுதல், தேர்தல் முறைமைகளில் மாற்றம் போன்ற விடயங்களில் எமக்கு எந்தவித பிரச்சினையும் கிடையாது. அதனை நாமும் வலியுறுத்தி வருகிறோம். அரசாங்க கட்சிக்குள் பொது இணக்கப்பாடு காணப்படுமாயின் இப்பிரேரணையை நிறைவேற்றலாம், காலத்தை இழுத்தடிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றார். 

No comments:

Post a Comment