03 March 2016

அரசியலமைப்பு குறித்து 3000 பரிந்துரைகள்


தேசிய அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவிற்கு  தற்போதுவரை பொதுமக்களிடமிருந்து 3000 இற்கும் மேற்ப்பட்ட பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குழுவின் தலைவரும் சட்டத்தரணியுமான லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது அனைத்து மாவட்டங்களிலிருந்தும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் எதிர்பார்த்ததையும் விடவும் மிகவும் ஆர்வத்துடன் தமது பரிந்துரைகளை பதிவு செய்துள்ளதோடு கொழும்பு மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளுக்கு அமைவாக எதிர்வரும் 03 ஆம் திகதி தொடக்கம் 05 ஆம் திகதி வரையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மீண்டும் விசேட கருத்துக்கணிப்பொன்றை மீண்டும்  முன்னெடுக்க எமது குழு தீர்மானித்துள்ளது. 

அந்தவகையில் தற்போது வரை பொதுமக்களிடமிருந்து 3000 இற்கும் மேற்ப்பட்ட பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துகளை உள்வாங்கும் எமது அமைப்பானது கடந்த ஜனவரி மாதம் உருவாக்கப்பட்டது. அந்தவகையில் எமது குழுவினர் நாடளாவிய ரீதியில் உள்ள 25 மாவட்டங்களில் உள்ள அனைத்து மக்களிடமிருந்தும் புதிய அரசியலமைப்பு ஸ்தாபிப்பது தொடர்பில் கருத்து கணிப்புகளை பதிவு செய்துள்ளனர். அந்தவகையில் ஏப்ரல் மாதமளவில் இது தொடர்பிலான அறிக்கையினை அரசாங்கத்திடம் சமர்பிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். 

No comments:

Post a Comment