09 March 2016

சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட கொடூரமே அரசியலில் மீண்டும்

கடந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூர தன்மையுடைய சர்வாதிகார செயற்பாடுகளை சகித்துக் கொள்ள முடியாமையே நான் மீண்டும் அரசியலுக்கு தள்ளப்பட்டேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா அவர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில் எனது ஆட்சிகாலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியை மகிந்த ராஜபக்சவுக்கு ஒப்படைத்த வின்னர் எந்தவொரு அரசியல் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தபோதும்  கடந்த பத்து வருடங்களாக கடந்த ஆட்சியில் நிலவிய சர்வாதிகார செயற்பாடு சிறுபான்மையினரான தமிழ், முஸ்லீம் மக்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் அரசியலுக்கு மீண்டும்  வருவதற்கு வழிகோலியது. 

கடந்த ஆட்சிகாலத்தில் வன்முறை சம்பவங்கள், கொலைகள், ஆட்கடத்தல்கள் உட்பட நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளை நாட்டை நேசிக்கும் ஒரு பிரஜை என்ற ரீதியில் இவற்றை என்னால் சகி;த்துக்கொள்ள முடியவில்லை. 

கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நாட்டில் நல்லாட்சியினை ஸ்தாபிக்கும் நோக்குடனே பொது வேட்பாளர் ஒருவரை மகிந்தவுக்கு எதிராக களம் இறக்கினோம். வெற்றியும் பெற்றோம். தற்போது குடும்ப ஆட்சிக்கு இடமில்லை. குடும்ப ஆட்சியின் பிரதிபலனை மக்கள் அனுபவிக்கின்றனர். இனி வரும் காலங்களில் அதற்கு இடமளிக்க முடியாது.

பெண்களின் பிரதிநித்துவத்தின் அவசியம்

இன்று உலக நாடுகளில் தொழிநுட்ப புரட்சியின் கீழ் அனைத்து துறைகளிலும் பெண்களின் அங்கதுவமானது மிகவும் அவசியமானதாக காணப்படுகின்றது. அந்தவகையில் இன்று கல்வி துறை, தொழிநுட்ப துறை உட்பட ஏனைய துறைகளில் பெண்களின் அங்கதுவமென்பது இன்றியமையாத காரணியாக மாற்றம் பெற்றுள்ளது. எமது நாட்டிலும் இவற்றை காணக்கூடியதாக இருந்தாலும் அரசியல் துறையில் பெண்களின் பங்களிப்பு எமது நாட்டில் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாகவே இந்த அரசாங்கத்தின் கீழ் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 25 வீதமான பெண்கள் பிரதிநிதிதுவத்தை பெற்று கொடுப்பதற்கான சட்ட மூலம் அன்மையில் பாராளுமன்றத்தில் அடிப்படைவாத தரப்பினரின் எதிர்ப்புகளின் மத்தியில் நிறைவேற்றப்பட்டது என்றார்.

No comments:

Post a Comment