14 March 2016

ராஜீவ் காந்தியின் கொலை எல்.ரீ.ரீ.ஈ செய்த மிகப் பெரும் தவறு

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழ் புலிகள் செய்த மிகப் பெரும் தவறு என்று காலஞ்சென்ற எல்.ரீ.ரீ.ஈ யின் கருத்தியலாளர் அன்ரன் பாலசிங்கம் சொன்னதாக ஒரு புதிய புத்தகத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது அச்சம் அடைந்திருந்த புலனாய்வு பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் அந்த கொலையில் அவர்களுக்கு தொடர்பு இருந்ததை ஆரம்பத்தில் மறைத்தனர் என்று பாலசிங்கம் நோர்வேயின் முன்னாள் ஸ்ரீலங்காவுக்கான விசேட தூதுவர் எரிக் சொல்ஹைமிடம் சொன்னாராம். ஆனால் மே 21,1991 படுகொலைக்கு சில வாரங்களின் பின்னர் அவர்கள் பாலசிங்கத்திடம் உண்மையை ஒப்புக் கொண்டார்கள் என்று மார்க் சோல்ட்டரின்”ஒரு உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதல்” (ஹஸ்ட் அன்ட் கொம்பனி, லண்டன்) எனும் நூல் தெரிவிக்கிறது.
இப்போது வெளியாகியுள்ள 549 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகம், ஸ்ரீலங்காவில் மூன்று தசாப்தங்களாக  இடம்பெற்ற மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட நோர்வே தலைமையிலான சமாதான நடவடிக்கையின் பூரணமான முழு விபரங்களையும் கொண்டுள்ளது. மே 2009ல் ஸ்ரீலங்கா இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளை நசுக்கி, பிரபாகரன் பொட்டு அம்மான் உட்பட அதன் தலைவர்கள் அனைவரையும் அழித்ததுடன் அந்த மோதல் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தது.
“ஒருவேளை எல்.ரீ.ரீ.ஈயின் உத்தியோகபூர்வ கொள்கைகளுக்கு மிகவும் சர்ச்சைக்குரிய விதத்தில், ராஜீவ் காந்தியின் கொலை எல்.ரீ.ரீ.ஈ செய்தவற்றில் எல்லாம் மிகப்பெரிய தவறு என்று பாலசிங்கம் ஒப்புக் கொண்டுள்ளார்” என அந்தப் புத்தகம் சொல்கிறது. எல்.ரீ.ரீ.ஈ, காந்தியின் கொலையை பற்றி ஒருபோதும் உத்தியோகபூர்வமாக அறிவித்தது கிடையாது, ஒரு ஸ்ரீலங்கா தமிழ் பெண் தற்கொலைக் குண்டுதாரி சென்னைக்கு அருகில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் அவரை வெடி வைத்துக் கொன்றார். தனிப்பட்ட முறையில் நோர்வீஜியர்களுக்கு பாலசிங்கம் தெரிவித்தது, காந்தியின் கொலை “ஒரு முழுமையான பேரழிவு” என்று.
சொல்ஹைமின் கூற்றின் பிரகாரம், காந்தியை கொலை செய்யும்  பிரபாகரனின் விருப்பம் 1987 – 90 களில் இந்தியா தனது இராணுவத்தை ஸ்ரீலங்காவில் நிலை நிறுத்தியபோது இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் கொலைக்கு பழி தீர்க்கும் விதத்திலும் மற்றும் அவர் திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் மறுபடியும் ஸ்ரீலங்காவுக்கு படைகளை அனுப்பக்கூடும் என்கிற ஒரு நம்பிக்கையிலும் எடுக்கப்பட்ட முடிவு என்று பாலசிங்கம் தெரிவித்துள்ளார். சொல்ஹைம் மேலும் தெரிவித்திருப்பது தனது கடைசி வருடங்களை லண்டனில் கழித்து 2006 டிசம்பரில் புற்றுநோயால் மரணமடைந்த பாலசிங்கம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் உதவிகளை அடைய வேண்டும் என்று விரும்பியபோதிலும் அவரது உண்மையான நாட்டம் இந்தியாவாகவே இருந்தது. “அதன்படி தனது வாழ்வின் இறுதிக் காலமான 2006ல் பாலசிங்கம் இந்த தவறான செயலுக்காக (கொலைக்கு) மன்னிப்புக்கோரி இந்தியாயுடன் சமாதானத்தை ஏற்படுத்த வெகுதூரம் முயற்சி செய்தார்”.
காந்தியின் கொலைக்குப் பிறகு முன்னர் தமிழ்நாட்டை தளமாகக் கொண்டிருந்ததுடன் புதுதில்லியின் ஆசீர்வாதங்களை அனுபவித்து வந்த எல்.ரீ.ரீ.ஈ யினை இந்தியாவில் சட்ட விரோத அமைப்பாக அறிவித்ததுடன், பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரை குற்றவாளிகளாகவும் பிரகடனப் படுத்தியது.
முரண்பாடாக, தமிழ் புலிகளை விமர்சித்து வந்த மிதவாத தமிழ் தலைவரும் மற்றும் கல்விமானுமான நீலன் திருச்செல்வத்தை 1999 ஜூலையில் கொழும்பு வீதியில் வைத்து எல்.ரீ.ரீ.ஈ படுகொலை செய்ததை ஏற்றுக் கொள்ளவும் பாலசிங்கம் தயக்கம் காட்டவில்லை. சொல்ஹைம் உட்பட நோர்வீஜியர்கள் அந்தக் கொலை தொடர்பாக பாலசிங்கத்துடன் எதிர்ப்பு தெரிவித்து விவாதித்தபோது, பாலசிங்கம் எந்தவித தயக்கமும் இன்றி ”ஆம், நாங்கள்தான் அவரைக் கொன்றோம் மற்றும் நீங்கள் என்னிடம் கேட்டால் அது ஏன் என்று நான் உங்களுக்குச் சொல்வேன்” என்று சொன்னார் என்று அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒருமுறை பாலசிங்கம் பிரபாகரன் ஒரு பிடிவாத குணமுள்ள யுத்த தளபதி என்றும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யினை ஒரு அரசியல் அமைப்பாக மாற்றவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்ததாக சொல்ஹைமினை மேற்கோள் காட்டி அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது பரீசினை தளமாக கொண்டியங்கும் சொல்ஹைமிடம் பாலசிங்கம் “ இந்த நபர்களின் (எல்.ரீ.ரீ.ஈ) வன்முறையாற்றும் தகுதியின் நீங்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம்” சொன்னதாகவும் அவரை மேற்கோள் காட்டி புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
சொல்ஹைமினைப் பொறுத்தவரை பாலசிங்கம், எல்.ரீ.ரீ.ஈயின் தவறுகளை ஒப்பக் கொள்வது உட்பட அவர்களுடன் மிகவும் நேர்மையாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
“காலப்போக்கில் பாலாவை நான் மிகவும் உயர்வாக மதித்ததுடன் மற்றும் அவரை உயர்ந்த மனிதராகவும் அதேபோல ஒரு நல்ல நண்பராகவும் கருதத் தொடங்கினேன்”.
  
-இந்தோ ஏசியன் செய்திச் சேவை  (ஐ.ஏ.என்.எஸ்-

நன்றி- தேனீ இணையம்

No comments:

Post a Comment