08 June 2016

சமஷ்­டி­யெனும் போர்­வையில் தனி­நாட்டை உருவாக்க சதி

சர்­வ­தேச நாடு­க­ளுக்கு வழங்­கப்­பட்ட உறு­தி­மொ­ழிக்கு அமை­வாக இலங்­கையில் வடக்கு மற்றும் கிழக்கை மீண்டும் இணைத்து சமஷ்டி என்ற போர்­வையில் தனி நாட்டை உரு­வாக்க பாரா­ளு­மன்­றத்தில் சதித் திட்டம் தீட்­டப்­ப­டு­கின்­றது. பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் சுவிஸ் ஆட்சி முறைமை தொடர்­பான உதா­ர­ணங்­களும் சம்­பந்தன் மற்றும் விக்­னேஸ்­வரன் ஆகி­யோரின் செயற்­பா­டு­களும் தாய் நாட்­டிற்கு ஏற்­பட்­டுள்ள பேரா­பத்தை வெளிப்­ப­டுத்­து­கின்­றது என மஹிந்த ராஜ­பக்ஷ தலைமை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் நல்­லாட்சி அர­சாங்க எதிர்ப்பு குழு தெரி­வித்­துள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தில் இரண்­டா­வது அதீத பெரும்­பான்­மையை கொண்ட ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் நல்­லாட்சி அர­சாங்க எதிர்ப்பு குழு தலை­மை­யி­லான கூட்டு எதிர் கட்­சிக்கு எதிர் கட்சி தலைவர் பத­வியை வழங்­காது 4.1 வீதத்­திற்கும் குறை­வான எண்­ணிக்­கையை கொண்ட தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பிற்கு எதிர் கட்சி தலைவர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் சம்­பந்தன் தனி நாட்டு கொள்­கையை தவிர நாட்டின் பொது­வான பிரச்­சி­னைகள் தொடர்பில் வாயை திறப்­பதே இல்லை எனவும் அந்த குழு தெரி­வித்­துள்­ளது.

பத்­த­ர­முல்லை - நெலும் வீதியில் அமைந்­துள்ள ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் நல்­லாட்சி அர­சாங்க எதிர்ப்பு குழுவின் அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. இதன் போது அங்கு உரை­யாற்­றிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹே­லிய ரம்­புக்­வெல்ல கூறு­கையில் ,மாற்று அர­சாங்கம் ஒன்றின் தலை­வரைப் போன்று எதிர் கட்சி தலைவர் இரா.சம்­பந்­த­னும அதில் முதல்­வரை போன்று சி.வி.விக்­னேஷ்­வ­ரனும் இன்று செயற்­ப­டு­கின்­றனர். இவர்­க­ளுக்கு நாட்டை பிரித்துக் கொடுக்­காது ரணில் - மைத்­திரி கூட்­டாட்சி ஓயாது என்­ற­வாறே தற்­போ­தைய நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­றது. சம்­பந்தன் சிறந்த அர­சி­யல்­வாதி ஆனால் அவர் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்கட்சி தலை­வ­ராக இருந்து கொண்டு தெற்கின் பிரச்­சி­னைகள் தொடர்பில் வாயை திறப்­பதே இல்லை. தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பிற்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்­கி­ய­மையே சர்ச்­சைக்­குரிய விட­ய­மாகும். பாரா­ளு­மன்­றத்தில் 52 பேரை கொண்ட கூட்டு எதிர் கட்சி புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளது. இது திட்­ட­மிட்ட மோச­மான ஜன­நா­யக விரோத செய­லாகும்.

வட மாகாண சபையில் அண்­மையில் பிரே­ரணை ஒன்று நிறை­வேற்­றப்­பட்­டது. இலங்­கையின் பெயர் உட்­பட பார­தூ­ர­மான பல விட­யங்கள் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதற்கு எதி­ராக அர­சாங்கம் ஒரு நட­வ­டிக்கை கூட எடுக்க வில்லை , மாறாக சர்­வ­தே­சத்­திற்கு வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­று­வ­தற்­காக பல்­வேறு நெருக்­க­டி­மிக்க ஆபத்­தான விட­யங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அன்று எதிர் கட்சி தலை­வ­ராக அமிர்­த­லிங்கம் இருந்த போது காலியில் முத­லா­வது கூட்­டத்தை நடத்தி , தமக்­கான பொறுப்­பினை வௌிப்­ப­டுத்­தினார். எதிர் கட்சி பத­விக்கு பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யத்­திற்கு உட்­பட்ட வகையில் கூடிய ஆச­னங்­களில் வெற்றிப்பெற்று தான் அமிர்தலிங்கம் அன்று எதிர்கட்சி தலைவரானார். ஆனால் அவ்வாறு எவ்விதமான அடிப்படை நிலையும் இல்லாத நிலையில் தற்போது எதிர் கட்சி தலைவராக சம்பந்தன் இருந்து கொண்டு பொதுவான பிரச்சினைகளில் எவ்விதமான தலையீடுகளும் செய்யவதில்லை என அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment