13 June 2016

வானைக்­கி­ழித்து வைகுண்டம் போவோம் என்­ற­வர்கள் கூரை ஏறி கோழி கூட பிடிக்க முடி­யா­தி­ருக்­கி­றார்கள்

வடக்கு, கிழக்கு பிரச்­சி­னைகள் தொடர்­பாக எதிர்க்­கட்­சித்­ த­லைவர் இரா.சம்­பந்­தனால் வெள்ளிக்­கி­ழ­மை­யன்று சபையில் முன்­வைக்­கப்­பட்ட ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில்   டக்ளஸ் தேவா­னந்தா ஆற்­றிய உரை 

இலங்­கைத்­தீ­வா­னது பல்­லின தேசிய சமூக மக்­களைக் கொண்ட நாடு. அந்த வகையில் இலங்கை ஜன­நா­யக சோஷலிஸ குடி­ய­ரசு என்றே எமது நாடு தேசிய ரீதி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டும் வரு­கி­றது.

ஆனாலும், நடை­மு­றையில் இங்கு வாழும் சிறு­பான்மை தேசிய இனங்­களின் அர­சி­ய­லு­ரி­மைகள் குறித்த பிரச்­சி­னைகள் தீராப்­பி­ரச்­சி­னை­யா­கவே இன்­னமும் இழு­பட்டு சென்று கொண்­டி­ருக்­கி­றது. அர­சியல் ரீதி­யாக உரி­மைகள் மறுக்­கப்­பட்ட நிலையில் அர­சியல் தீர்­வொன்றை விரும்பி நிற்கும் எமது தமிழ் பேசும் மக்­களின் சார்­பா­கவும் அபி­வி­ருத்தி மற்றும் சகல வாழ்­வியல் உரி­மை­க­ளுக்­கா­கவும் எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்கும் எமது மக்­களின் சார்­பா­கவும் எனது கருத்­துக்­களை இந்த அதி­யுயர் சபையில் நான் முன்­வைக்­கின்றேன்.

13ஆவது திருத்­தச்­சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை ஓர் ஆரம்­ப­மாகக் கொண்டு, அதற்கு மேல­திக அதி­கா­ரங்­களை அல்­லது விசே­ட­மான அதி­கா­ரங்­களை அல்­லது சமச்­சீ­ரற்ற அதி­கா­ரங்­களை வழங்­கு­வதன் மூலம் அர­சி­ய­லு­ரிமைப் பிரச்­சி­னைக்­கான தீர்­வினை நோக்கிச் செல்­லலாம் என்­ப­தையே நாம் ஆரம்பம் முதல் வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கின்றோம்.
ஆனாலும், அதை சக தமிழ்க் கட்சித் தலை­மைகள் அன்று ஏற்­றி­ருக்­க­வில்லை. காலம் கடந்­தா­வது சக தமிழ்க் கட்­சிகள் 13ஆவது திருத்­தச்­சட்டம் குறித்து பேசவும் அதன் நடை­மு­றை­களில் பங்­கெ­டுக்­கவும் வந்­தி­ருக்­கின்­றன.
அந்த வகையில், எமது வழி­முறை நோக்கி அவர்கள் வந்­ததை நாம் வர­வேற்­கின்றோம். இதே­வேளை, கையிலே அமு­த­சு­ரபி ஒன்றை வைத்­துக்­கொண்டு பிச்­சைப்­பாத்­திரம் கொண்டு அலை­வது போல், 37 அதி­கா­ரங்­களை கொண்ட மாகா­ண­சபை அதி­கா­ரத்­தையே நடை­மு­றைப்­ப­டுத்த விரும்­பா­மலும், முடி­யா­மலும் எமக்கு ஒன்றும் கிடைக்­க­வில்லை என்று பிச்­சைப்­பாத்­திரம் ஏந்தித் திரி­கி­றார்கள்.

கையில் கிடைத்­தி­ருக்கும் மாகாண சபை அதி­கா­ரத்தை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­ய­வில்லை. புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து யோச­னை­களை முன்­வைத்­துக்­கொண்டு திரி­கி­றார்கள். நாமும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தை வர­வேற்­கின்றோம்.

அதற்­கான எமது யோச­னை­க­ளையும் முன்­வைத்­தி­ருக்­கிறோம். அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் நல்­லெண்ண முயற்­சி­களை நாம் ஆத­ரித்தும் வர­வேற்றும் வரு­கின்றோம்.

ஆனாலும் 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யா­த­வர்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் உரு­வாகும் தீர்வை எவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்தப் போகின்­றார்கள் என்­பதே எனது கேள்­வி­யாகும்.

முன்னாள் ஐனா­தி­பதி தடை என்­றார்கள். முன்னாள் ஆளுனர் தடை என்­றார்கள். முன்னாள் பிர­தம செய­லாளர் தடை­யென்­றார்கள். ஆனால் ஆட்சி மாறி புதிய ஐனா­தி­ப­தியும் பிர­த­மரும், புதிய புதிய ஆளு­னர்­களும், புதிய பிர­தம செய­லா­ளரும் வந்­தி­ருக்­கி­றார்கள்.
மாகா­ண­ச­பையை நடத்­து­வ­தற்கு தொடர்ந்தும் அடுத்­த­வர்­களே தடை­யாக இருந்து வரு­வ­தாக குற்­றுஞ்­சாட்டி வரு­வதை யாரும் ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள். வடக்கு மாகாண சபை என்­பது சாத­னைக்­கு­ரிய சபை­யாக இல்­லாமல், சர்ச்­சைக்­கு­ரிய சபை­யா­கவே காணப்­ப­டு­கின்ற நிலை தொடர்­கி­றது.
தமிழர் தரப்பில் இருந்து இன்று அர­சியல் பலத்­தோடு மத்­திய அர­சுக்கு ஆத­ரவு தெரி­வித்து வரு­கி­றார்கள். இதே­வேளை, அதே தமிழ்க் கட்சித் தலை­மைகள் மாகாண அர­சையும் பெரும்­பான்மை பலத்­தோடு ஆட்சி புரிந்து வரு­கி­றார்கள்.

எனினும், தமிழ் பேசும் மக்­களின் நிலை நீடித்த துய­ரங்­க­ளா­கவே தொடர்­கி­றது. இன்று அவர்­களும் இதையே கூறு­கின்­றார்கள். வீதி புன­ர­மைப்­புக்கள் விட்ட குறையில் நிற்­கின்­றன. மத்­திய அரசின் பொறுப்பில் இருக்கும் பிர­தான வீதிகள் பெரும்­பா­லா­னவை புன­ர­மைக்­கப்­பட்டு விட்­டன. ஆனாலும், மாகாண சபையின் நிர்­வா­கத்தின் கீழ் இயங்கும் உள்­ளூராட்சி சபைகள் செய்து முடிக்க வேண்­டிய உள்ளூர் வீதிகள் குண்டும் குழி­யு­மாக காட்­சி­ய­ளிக்­கின்­றன.

மக்­க­ளுக்கு சொந்­த­மான காணி, நிலங்கள் தொடர்ந்தும் மீட்­கப்­பட்டு வரு­கின்­றன. ஆனா­லும், இன்­னமும் விடு­விக்­கப்­பட வேண்­டிய எமது காணி, நிலங்­களை துரி­த­மாக விடு­விக்க வேண்டும். குறிப்­பாக, செழிப்­பான வளம் கொண்ட விவ­சாய நிலங்கள், பொரு­ளா­தார முக்­கி­யத்­துவம் வாய்ந்த மயி­லிட்டி மீன்­பிடித் துறை­முகம் போன்­ற­வையும் இன்னும் விடு­விக்­கப்­ப­டாத நிலையே காணப்­ப­டு­கின்­றது.

அத்­துடன், மீள்குடி­யே­றிய மக்­க­ளுக்­கான வாழ்­வா­தார வச­திகள் மேலும் வளப்­ப­டுத்­தப்­பட வேண்டும். சிறை­களில் நீண்ட கால­மாக தடுத்துவைக்­கப்­பட்­டி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதி­களை பொது மன்­னிப்பின் அடிப்­படையில் விடு­விக்­கப்­பட வேண்டும்.பொலி­ஸாரும் படை­யி­னரும் அந்­தந்த மாவட்­டங்­களின் இன விகி­தா­சா­ரத்­திற்கும், சனத்­தொ­கைக்கும் ஏற்றவகையில் நிலைகொண்­டி­ருத்தல் வேண்டும்.

வீடி­ழந்த மக்­க­ளுக்­கான வீட்­டுத்­திட்­டங்கள் வழங்­கப்­பட வேண்டும். இதன்­போது கடைப் பிடிக்­கப்­ப­டு­கின்ற இறுக்­க­மான நடை­மு­றைகள் தளர்த்­தப்­பட வேண்டும்.வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் வேலை கேட்டு தவ­மி­ருக்­கி­றார்கள். சுகா­தா­ரத்­தொண்­டர்கள் வேலை கேட்டும் நிரந்­தர நிய­மனம் கோரியும் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்­து­கிறார்கள்.
விசேட திட்டம் என்ற வகையில், சமுர்த்தி நிவா­ர­ணங்கள் மக்­களின் தேவை­க­ளுக்கு ஏற்­ற­வாறு அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். சமுர்த்திப் பய­னா­ளி­களின் எண்­ணிக்­கையும் மக்­களின் வாழ்­நி­லைக்கு ஏற்­ற­வாறு அதி­க­ரிக்­கப்­பட வேண்டும்

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, யுத்த அனர்த்­தங்­க­ளினால் தமது உடலில் குண்­டுத்­து­கள்­க­ளையும், ஆயுத சித­றல்­க­ளையும் சுமந்து வாழ்­கின்­ற­வர்­க­ளுக்கு அரசு விசேட வைத்­தி­யர்­களைக் கொண்டு உத­வி­களை வழங்கும் என்று அறி­வித்­தி­ருப்­பதை வர­வேற்­கின்றேன். அந்த அறி­விப்பு முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தையும், பாதிக்­கப்­பட்­ட­வர்கள் நன்­மை­ய­டை­வ­தையும் உறு­திப்­ப­டுத்­த­டவும் அவ­சி­ய­மான நட­வ­டிக்­கை­க­ளையும் அர­சாங்கம் எடுக்­க­வேண்டும். யுத்தம் கார­ண­மாக அங்­க­வீ­னங்­களை எதிர்­கொண்­டுள்ளோர், பெண் தலை­மைத்­துவக் குடும்­பங்கள், முன்னாள் இயக்­கங்­களின் போரா­ளிகள் போன்­றோ­ரது வாழ்­வா­த­ாரங்கள் தொடர்பில் விசேட ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். புகை­யி­ர­தத்தில் பயணம் செய்யும் அங்­க­வீ­ன­முற்ற படை­யி­ன­ருக்கு இன்று முதல் சிறப்பு பயண அட்டை வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அதனைப் பயன்­ப­டுத்தி அவர்கள் சாதா­ரண பய­ணச்­சீட்டில் 50 வீத சலு­கையைப் பெற்றுக்கொண்டு பய­ணிக்க முடியும் என்றும் புகை­யி­ரத திணைக்­க­ளத்தின் போக்­கு­வ­ரத்து அத்­தி­யட்­சகர் விஜய சம­ர­சிங்க தெரி­வித்­துள்ளார்.

இந்த அறி­விப்பை வர­வேற்­கின்றேன். போரினால் தமது அங்­கங்­களை இழந்த எமது நாட்டுப் பிர­ஜைகள் அனை­வ­ருக்கும் இது­போன்ற சலு­கை­களும், முன்­னு­ரி­மை­களும் வழங்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். ஆனால் இது­போன்ற சலு­கை­களும், முன்­னு­ரி­மை­களும் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கும் கிடைக்­கப்­ பெறவேண்டும். போரை வெற்றிகொள்ள படை­யினர் போரா­டி­ய­தைப்போல், போர் வெற்றி கொள்­ளப்­ப­டு­வ­தற்கு தமிழ் மக்கள் தம்மை அர்ப்­ப­ணித்­தி­ருக்­கின்றார். அதில் பெறு­ம­தி­மிக்க உயிர்­க­ளையும், தமது அங்­கங்­க­ளையும், உடைமை­க­ளையும் இழந்­தி­ருக்­கின்­றார்கள் என்­ப­தையும் கவ­னத்தில் எடுப்­பது அவ­சி­ய­மாகும். அதுவே தேசிய நல்­லி­ணக்­கத்தை அர்த்­த­பூர்­வ­மாகக் கட்­டி­யெ­ழுப்­பவும் தமிழ் மக்­களின் மனங்­களை வென்­றெ­டுக்­கவும் உதவும் என்­ப­தையும் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன்.

வடக்கின் கல்வி வளர்ச்சி வீழ்ச்­சி­ய­டைந்து கிடக்­கி­றது. இது குறித்து அதி­கா­ரத்தில் உள்­ள­வர்கள் கவனம் செலுத்­து­வ­தாக இல்லை. யுத்த காலத்­திலும், அதற்கு பிந்­திய காலத்­திலும் கல்வி ரீதி­யாக வடக்கு முன்­னேற்றம் கண்டு வந்­தி­ருந்­தது. வடக்கு கிழக்கில் நீடித்த யுத்தம் கார­ண­மாக கல்­வியைத் தொட­ர­மு­டி­யா­மலும், தொழில்­களை தொட­ர­மு­டி­யா­மலும் சமூ­கத்தில் பொரு­ளா­தார நெருக்­க­டியை எதிர்­கொண்டு இருப்­போ­ருக்கு, தொழில் பயிற்­சி­களை வழங்­கு­வ­தற்கும், சுயதொழில் முன்­னேற்­றங்­க­ளுக்கும் விஷேட திட்­டங்­களை அர­சாங்கம் முன்­னெ­டுக்க வேண்டும்.

நாம் அப்­போது அதி­கா­ரத்தில் இருந்­த­வர்கள். படை­யி­னரின் கட்­டுப்­பாடு புலி­களின் கட்­டுப்­பாடு என்று பிர­தேச ரீதியில் பேதங்கள் பாராமல் கல்வி வளர்ச்­சிக்­காக பல முன்­னேற்­பா­டு­களை செய்­தி­ருந்தோம். வடக்கின் வரட்சி நிலையை போக்­கவும், அதனால் எதிர்­கா­லத்தில் எதிர்­கொள்­ளப்­போகும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வுகாணவும் உடன் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். நெடுந்­தீவில் எமது முயற்­சியால் உவர்­நீரை நன்­னீ­ராக்கும் திட்டம் நிறை­வேற்­றப்­பட்டு நெடுந்­தீவு மக்­களின் நீர்ப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்வு காணப்­பட்டு விட்­டது. இதேபோல் ஏனைய பிர­தே­சங்­க­ளிலும் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். யாழ். குடா­நாட்டில் நிலத்­தடி நீர் பெரிதும் மாச­டைந்த நிலையில் காணப்­ப­டு­வதால், இர­ணை­மடு நீர் வழங்கல் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அத்­துடன், நான் நேற்­றை­ய­தினம் இந்த உய­ரிய சபையில் குறிப்­பிட்­ட­து­போல, ஏனைய நீர்த்திட்­டங்கள் தொடர்­பிலும் அவ­தா­னங்கள் செலுத்­தப்­பட வேண்டும். மேலும், அதி­க­ரித்த இர­சா­யன உரப் பாவனை, கிருமி நாசினிப் பாவ­னைகள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்டும். வடக்கில் இன்று உரு­வா­கி­யி­ருக்கும் தனிப்­பட்ட குழு மோதல்­களும் வன்­மு­றை­களும் வருத்தம் தரும் செய்­தி­க­ளாக வரு­கின்­றன. இளை­ஞர்கள் மத்­தியில் காலா­சார ரீதி­யி­லான பரப்­பு­ரைகள்,விழிப்­பு­ணர்வு செயற்­பா­டுகள் என்­பன முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

அதே போல், தொழில் நிறு­வ­னங்­களை நிறு­வு­வதன் மூலம், தொழிற்­கல்வித் திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதன் மூலம் இளைஞர், யுவ­தி­க­ளுக்­கான வேலை வாய்ப்­பு­க்களை நாம் உரு­வாக்க முடியும். இத் மூலம் எமது இளை­யோரை வன்­மு­றை­களில் இருந்து மீட்­டெ­டுக்க முடியும். பாரா­ளு­மன்­றத்தில் விவா­தங்­களை நடத்­தினால் மட்டும் போதாது; குரல்­களை எழுப்­பினால் மட்டும் போதாது. செயற்பாடு­களும் இருக்க வேண்டும். நாம் அதி­கா­ரத்தில் இருந்­த­போது போதிய அர­சியல் பலம் எமக்கு இருந்­தி­ருக்­க­வில்லை. ஆனாலும், வெறு­மனே குரல்­களை எழுப்­பு­வ­தை­விட செயல்­களில் காட்­டி­யி­ருந்தோம். இன்று அர­சியல் பலத்­தோடு அதி­கா­ரத்தில் இருப்­ப­வர்கள் குர­லோடு மட்டும் இருந்து விடாமல் செய­லிலும் அதை காட்ட முன்­வ­ர­வேண்டும். எம்மை பார்த்து என்ன செய்­தீர்கள் என்று பிறர் சுட்டு விரலை நீட்டும் போது ஏனைய நான்கு விரல்­களும் அவர்­களை நோக்­கியே நீள்­கின்­றன.

நாம் ஜன­நா­யக அர­சி­ய­லுக்கு வந்­தி­ருந்த கால­கட்­ட­மா­னது, தமிழ் மக்­களின் இருண்ட கால­மாகக் காணப்­பட்­டது. தமி­ழர்கள் மீதான இனவாதமென்பது தென் பகுதியில், ஓர் இயக்க வடிவில் பல்வேறு தரப்பினர் மத்தியில் வியாபிக்கச் செய்யப்பட்டிருந்தது. அந்த நிலையில் தமிழ் பேசும் மக்களை பாரிய அழிவுகளிலிருந்து காப்பாற்றும் நோக்கில் நாம் அப்போதைய அரசுகளுடன் இணக்க ரீதியிலான அரசியலை முன்னெடுத்திருந்தோம். இதுவே அன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவையாகவும் இருந்தது. அந்த வகையில், யுத்தத்தை மேற்கொண்டிருந்த அரசுகளுடனும், யுத்தத்தை வெற்றிகொண்ட அரசுடனும் இணக்க அரசில் நடத்தியவாறே, எமக்கிருந்த குறுகிய அரசியல் பலத்தைக் கொண்டு நாம் ஆற்றியுள்ள பணிகள் ஏராளம் என்பதை எமது மக்கள் அறிவார்கள். அன்று எமது இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படாதிருப்பின் தமிழ் மக்களின் அழிவுகள் இன்னும் பாரியதாகவே இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அன்று நாம் கற்பாறைகளை பிளந்துகூட தண்ணீர் ஊற்றையே தருவித்தவர்கள். இன்று பசுந்தரையில் இருந்துகொண்டு துளி நீரைக்கூடப் பெறமுடியாமல் இருக்கிறார்கள். தேர்தல் காலங்களில் வாக்குறுதி வழங்கும் போது தாங்கள் வானைக்கிழித்து வைகுண்டம் போவோம் என்றார்கள். அரசியல் அதிகாரங்களைப் பெற்ற பின்னர் கூரை ஏறி ஒரு கோழி கூடப் பிடிக் முடியாமல் இருக்கிறார்கள் என்பதே யாதார்த்தமாகின்றது.

நன்றி- வீரகேசரி

No comments:

Post a Comment