25 July 2009

அம்பாறையில் பாலியல் வல்லுறவு சந்தேக நபர் அடித்துக் கொலை

அம்பாறை மாவட்ட மத்திய முகாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வேப்பையடி வாணி வித்தியாலய மோகன் மதுனுஸ்கா (13) மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர் “ரவுடி பாபா” எனப்படும் கனகரத்தினம் சிறீஸ்கந்தராஜா(26) என்பவரே இக்கொலையுடன் தொடர்புடையவர் என நபர் என உறுதிப்படுத்தப்பட்டது. இவர் தேடப்பட்டு வந்த போதிலும் தலைமறைவாகி இருந்ததாகவும் பின்னர் இவர் பெண் வேடம் அணிந்து அப்பகுதியிலுள்ள வயலில் கதிர் பொறுக்குவதாகக் கிடைத்த தகவலையடுத்து விரைந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள், அவரை மடக்கிப் பிடித்து தாக்கியதாலேயே அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.
கடந்த புதன்கிழமை தனது வீட்டிலிருந்து அயல் கிராமத்திற்கு சைக்கிளில் முட்டை விற்பதற்காக சென்றிருந்த வேளையே மோகன் மதுனுஸ்கா பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் கத்தி வெட்டுக் காயங்களுடன் குற்றுயிராகக் காணப்பட்ட நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமானார். சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் மோப்ப நாயின் உதவியைப் பயன்படுத்தினர். அச்சமயம் சந்தேக நபரின் சகோதரியின் வீடு வரை சென்ற நாய், அங்கிருந்து மாணவியின் உடை, சந்தேக நபரின் அடையாள அட்டை மற்றும் சாரம் ஆகியவற்றை கவ்விக் கொண்டு வெளியே வந்ததுள்ளது

No comments:

Post a Comment