இலங்கைக்கு 2.5 பில்லியன் டொலர் கடன்
இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் 2.5 பில்லியன் டொலர்கள் வழங்க இணங்கியுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் அறிவித்தார். இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9 பில்லியன் டொலர்களை கடனாக கோரியிருந்த போதும் அதனை 2.5 பில்லியன் டொலர்கள் அதிகரித்து வழங்கவும் முடிவெடுத்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் குறிப்பிடுகையில் சர்வதேச நாணய நிதியம் தனது முதலாவது கூட்டத்தை ஜுலை 24 ஆம் திகதி நடத்துகிறது. கடன் தொகை ஜுலை, செப்டம்பர், நவம்பர் மாதங்கள் என எட்டு தவணைகளில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. முதற் தவணையில் வழங்கப்படும் கடன் தொகைக்கு 0.5 வீத வட்டியே அறவிடப்படவுள்ளது. கிடைக்கும் கடன் தொகை தொடர்பாக சகல தரவுகளையும் எம்மால் விளக்கமாக கூறமுடியும். வரவு செலவு திட்டம் உள்ளிட்ட சகல திட்டங்களும் பாதுகாக்கப்பட்டே கடன் தொகை பெறப்படுகிறது.
No comments:
Post a Comment