23 July 2009

பாஸ் நடைமுறை ரத்து

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முதல் (22.07.2009) வாகன பாஸ் நடைமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக மட்டக்களப்பு நகர் வர்த்தகர்களை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் சந்தித்தபோது தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் இனிமேல் எந்த வாகனங்களும் பாஸ் எடுக்கத் தேவையில்லை. நாட்டில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு புதிய சூழ் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் வாகனப் பாஸ் நடை முறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியினதும்,பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினதும் அறிவுறுத்தலுக்கும், ஆலோசனைக்கேற்பவும் இந் நடைமுறை அமுல்படுத்தப்படுகின்றது என்றார்.

No comments:

Post a Comment