22 July 2009

புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 37.5 கிலோ தங்கம் ஆயுதங்கள் மீட்பு

புதுக்குடியிருப்பு - வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் பொலித்தீன்களால் பொதி செய்யப்பட்ட நிலையில் நிலத்துக்குக் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த 37.5 கிலோ எடையுள்ள தங்க நகைகள் மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். இந்த நகைகளில் தாலிக்கொடிகள், மாலை, காப்பு உட்பட பல்வேறு உபகரணங்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

புலிகள் தமது ஈழம் வங்கிக்காக இந்த நகைகளை அப்பாவி மக்களிடமிருந்து சேகரித்தோ, வரியாக அறவிட்டோ இருக்கலாம் நம்பப்படுகிறது. இதேவேளை, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பின் பல்வேறு பிரதேசங்களில் தேடுதல்களை மேற்கொண்ட படையினர் ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் - 6610, எம். பி. எம். ஜி. ரவைகள் - 890, 60 மி.மீ ரக மோட்டார் குண்டுகள் - 50, 81 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள் 127, 82 மி. மீ. மோட்டார் குண்டுகள் 70, கைக்குண்டுகள் 133 மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளனர்

No comments:

Post a Comment