24 July 2009

இடம்பெயர்ந்த மக்களுக்கு ரஷ்யா 5 லட்சம் அமெ. டொலர் உதவி

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமானத் தேவைகளுக்காக ரஷ்யா ஐந்து லட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வரவு செலவுத் திட்டத்துக்கான ரஷ்யாவின் வருடாந்த தன்னார்வ பங்களிப்பின் ஒரு பகுதியாக ஜெனீவாவில் உள்ள ரஷ்யாவின் தூதுவரும் ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதிநிதியுமான கெலரி லொஸ்சினீ மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஜெனீவாவில் ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான கலாநிதி தயான் ஜயதிலக்கவூடாக இந்நிதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment