தமிழ் மக்கள் யாருக்கு வோட்டு போட வேண்டும்
வரும் ஆவணித்திங்கள் 8ம் திகதி இலங்கையில் யாழ்பாணத்திலும், வவுனியாவிலும் உள்ளுர் ஆட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. புலிகளை ஆயுத ரீதியாக இலங்கை அரசு தோற்கடித்த பின்பு தமிழ் பகுதியில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். அரசானது அவசரப்பட்டு இத் தேர்தலை நடாத்துகிறது. எனினும் இத்தேர்தல் நடைபெறும் பகுதிகளைப் பொறுத்தவரையில் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அண்மைகால யுத்தத்தினால் இடம் பெயராத பிரதேசங்களாகும். வடக்கு கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது..எனினும் கணிசமானதொரு சுமூகநிலைமை இன்னமும் ஏற்படவில்லை. இன்றைய நிலையில் இப்பகுதிகளில் தேர்தலை தவிர்ப்பதற்கு அவசியங்கள் இல்லை என்று அரசாங்கம் எத்னைதான் காரணங்களைக் கூறினும் அரசு தன்னலம் சார்ந்த சில பல தேவைகளைக் கருதியே இங்கு அவசரமாக தேர்தலை நடத்துகின்றது என்பதே உண்மையாகும்.
கிழக்கில் தனது பொது சன ஐக்கிய முன்னணி ஊடாக தனது பிரசன்னத்தை காட்டி நிற்கும் மகிந்த அரசு, வடக்கிலும் இது போன்ற ஒரு பிரசன்னத்தை உண்டாக்குவதற்காக முனையும் ஒரு செயற்பாட்டிற்காகவே இத் தேர்தல்களை அவசரமாக நடாத்துகின்றது என்றே பொதுவாகக் கருத இடமுண்டு.கிழக்கில் முதலில் பிள்ளளையானையும் அதன் தொடர்சியாக கருணாவையும் தங்கள் பிரதிநிதிகளாக நிலைநாட்டியிருக்கும் மகிந்த அரசு, வடக்கிலும் இது போன்ற ஒரு செயற்பாட்டிற்கு முயற்சிக்கின்றது என்றே தெரிகின்றது. அதிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியோடு இணைந்துள்ளவர்களே தமிழ் மக்கள் மத்தியிலும் செல்வாக்குடையவர்களாக உள்ளார்கள் எனக் காட்ட முனைபடுவதுவும் தெளிவாகத் தெரிகின்றது. முன்னர் புலிகள் தமிழர் கூட்டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ. போன்ற கட்சிகள் ஒவ்வொன்றிலுமிருந்து ஒவ்வொரு துண்டுப் பகுதியினரை தனக்குக் கீழ் கொண்டு வந்தது போல இன்று மகிந்த அரசானது ஈ.பி.டி.பியையும், ரெலோ, ஈரோஸ் ஆகிய குழுக்களில் ஒவ்வொரு பகுதியினரையும் தனக்குக் கீழ் கொண்டு வந்துள்ளது. இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பைப் சேர்ந்த சிறீகாந்தா, கிஷோர்குமார், விநோதரலிங்கம் போன்றவர்களும் அரசாங்கமானது மறைமுகமாக ஒட்டி உறவாடத் தொடங்கியுள்ளனர்.
முழு விபரம் http://www.sooddram.com/Articles/samaran/sooddram_July222009.htm
No comments:
Post a Comment