23 July 2009

ஏ-9 ஊடாக பஸ் போக்குவரத்து பரீட்சார்த்தமாக ஆரம்பம்

யாழ்ப்பாணம் - கொழும்பு ஏ-9 நெடுஞ்சாலை ஊடாக பயணிகள் போக்குவரத்து பரீட்சாத்தமாக நேற்று (22-07-2009) காலை 10.30 மணியளவில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வட மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. அவர்களால் தேசிய கொடி அசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுமார் 20 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாத செயற்பாடுகளால் தடைப்பட்டிருந்த யாழ்ப்பாணம் -கொழும்பு இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவை நேற்று ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும். பயணிகள் போக்குவரத்துக்காக ஏ-9 வீதி திறக்கப்படுவதை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பசில் ராஜபக்ஷ, வடக்கு கிழக்கு மக்களின் நலன்களைப் பேணுவதற்கு எந்த ஒரு தீர்மானத்தையும் எடுக்க அரசு தயாராக உள்ளதாக கூறினார்.

No comments:

Post a Comment