22 July 2009

யாழ். மாநகரசபைக்கான தேர்தல் வாக்காளர் அட்டை

யாழ்ப்பாண மாநகரசபை வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 02 ஆம் திகதி வரை விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள மாவட்ட தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் பி.குருநாதன் வாக்காளர் அட்டைகள் 21-07-2009 யாழ்ப்பாண பிரதம தபாலகத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். யாழ்.மாநகரசபைத் தேர்தலில் வாக்களிக்க 100417 வாக்காளர்கள் தகுதி பெற்றிருப்பதால் அனைவரது வாக்காளர் அட்டைகளும் தபாலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இடப்பெயர்வு காரணமாக முகவரி மாற்றமிருந்தால் தமக்குரிய வாக்காளர் அட்டைகளை யாழ்ப்பாண பிரதம தபாலகத்தல் தேசிய அடையாள அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்றார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் யாழ். மாநகரசபை வாக்காளர்கள் தமது வாக்காளர் அட்டைகளை முகாம் பொறுப்பாளர் ஊடாக பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment