22 July 2009

மக்களின் நலனுக்காக தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் - ஜி.ரி.லிங்கநாதன்

அரசின் அடக்கு முறைகளை உடைத்தெறிவதற்காக தொடங்கப்பட்ட தமிழ் இளைஞர்களுடைய ஆயுதப்போராட்டம் 30 வருடகாலத்திற்குப் பின்னர் முடிவுற்ற நிலையில் இறுதியாக 2,70,000 மக்களை ஒரு திறந்தவெளி சிறைக்குள் மட்டுமே அழைத்துவர முடிந்துள்ளது. ஆயிரக்கணக்கான போராளிகள் தமிழ்த் தலைவா,; பொதுமக்களை இழந்து அடுத்த கட்ட நகர்வு என்னவென்று தெரியாது தடுமாறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது என வவுனியா கோவில்குளத்தில் இடம்பெற்ற வீரமக்கள் தின நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார். மேலும்
இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திருப்ப அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு அதன்வழியாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அவிபிருத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் கட்சியின் நிலைப்பாடாகும். தமிழ் கட்சிகளுக்கிடையே ஒற்றுமை இல்லை என்பது பெரும் கவலைக்குரிய விடயமாகும். நடந்தவைகளை மறந்து கசப்புணர்வுகளைத் தூக்கி எறிந்துவிட்டு நாம் ஒன்றிணைவது ஜனநாயக உரிமைகளை மீட்டெக்க இலகுவான வழியாகும் என்றார். முன்னாள் புளொட் எம்.பி. வி.பாலச்சந்திரன் பேசுகையில்; காந்தீய அமைப்பின் ஊடாக அமரர் உமா மகேஸ்வரன் மேற்கொண்ட நடவடிக்கைகளில் முக்கியமானது வன்னிப் பிரதேசத்தின் எல்லைப்புற கிராமங்களில் மக்கள் குடியேற்றப்பட்டு வலுப்படுத்தப்பட்டது. எமது நிலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. தலைவர் உமா மறைந்து 20 வருடங்களாகியும் நாம் அவரை வருடாந்தம் நினைவு கூருகின்றோம்.பெரும் சோகத்தின் மத்தியில் தான் இன்றும் நிற்கின்றோம்.எமது உறவுகள் அகதிமுகாமில் முள்ளுக் கம்பிகளுக்குள் அடைபட்டு இருக்கின்றார்கள் என்றார்.

No comments:

Post a Comment