யாழ். குடாவில் எரிபொருள் விலைகள் குறைப்பு
வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ், ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய யாழ்ப்பாணத்தில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வள அமைச்சர் பௌசி தெரிவித்தார். இதன்படி, பெற்றோல் விலை ரூ.6.50 சதத்தினாலும் டீசல் விலை ரூ.5.10 சதத்தினாலும் மண்ணெண்ணெய் விலை ரூ.5.60 சதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளன.
ஏ-9 வீதி திறக்கப்பட்டு வடபகுதிக்கு எரி பொருட்களை தரைவழியாக எடுத்துக் செல்லும் தடங்கல்கள் நீங்கியுள்ளதாலும் கப்பல் கட்டணங்கள் மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் குறைந்துள்ளதாலும் வட பகுதி மக்களுக்கு சலுகை வழங்கத் தீர்மானித்ததாக அமைச்சர் கூறினார். புதிய விலைக் குறைப்பின்படி பெற்றோல் 134 ரூபாவுக்கும் டீசல் ரூ.76.50 சதத்திற்கும் மண்ணெண்ணெய் 54 ரூபாவுக்கும் விற்கப்படும்.
No comments:
Post a Comment