24 July 2009

சமாதான, அரசியல் ரீதியான சவால்கள்

இலங்கையின் தேசியவாத அரசாங்கத்திற்கு எதிராக இணக்கமின்மையைக் கொண்டிருக்கும் நாடுகளின் வெளிப்படையான அல்லது தந்திரோபாயமான ஆதரவைக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளின் சமாதான மற்றும் அரசியல் ரீதியான சவால்களை உள்நாட்டு யுத்தத்தில் வெற்றியடைந்திருக்கும் கொழும்பு எதிர்நோக்குவதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தின் பின் தலைமைப் பதவியை செல்வராஜா பத்மநாதன் அல்லது கே.பி. உத்தியோகபூர்வமாக ஏற்றிருப்பதை தொடர்ந்து சுதந்திர தமிழீழத்திற்கான இலங்கையின் போராட்டம் முற்றிலும் புதிய பரிமாணத்தை எடுத்திருப்பதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கைக்கு எதிரான விசேட நலன்களைக் கொண்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் போராட்டமானது நாடுகளில் பரந்துபட்ட அளவில் அமையும் என்று கருதப்படுகிறது.

இலங்கையில் புலிகளில் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டது உண்மையாக இருக்கின்ற போதும் வெளிநாடுகளில் குறிப்பாக மேற்குலகில் புலிகளின் நிதி, ஆயுதங்கள் பெற்றுக்கொள்வதற்கான கட்டமைப்பு முழுமையாக இருப்பதாக அண்மையில் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட பயங்கரவாத விடயங்கள் தொடர்பான இலங்கை நிபுணர் ரொஹான் குணரத்ன தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகள் பௌதிக, நிதிசார் தளங்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை அதிகளவிற்கு மேற்கொண்டு அவற்றை இல்லாமல் செய்துவிட வேண்டும் என பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

குமரன் பத்மநாதன் ஐ.நா., அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் கணிசமான பிரிவினருடன் மோதல் சூனியப் பகுதியில் அகப்பட்டிருந்த தமிழ் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதென்ற போர்வையில் பேச்சுவார்த்தை, யுத்தநிறுத்தத்திற்கான கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டிருந்தவர். அவர் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் தலைமை அதிகாரியான விஜய் நம்பியாருடனும் தொடர்பு கொண்டிருந்தார். விஜய் நம்பியார் கொழும்பில் இருந்தபோது நடவடிக்கைகளில் மனிதாபிமான இடைநிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்க குமரன் பத்மநாதன் தொடர்புகொண்டிருந்தார்.

ஆனால், குமரன் பத்மநாதன் இப்போதும் விடுதலைப்புலிகளின் சட்டரீதியான மற்றும் சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகளின் பாரிய அனுகூலங்களுக்குப் பொறுப்பாளியாக உள்ளார். இது வருடாந்தம் 320 மில்லியன் தொகைக்கும் மேற்பட்டதாகும். மொன்றியலில் மாத்திரம் ஒரு பில்லியன் டொலர் போதைப்பொருள் வர்த்தகத்தில் புலிகள் ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது. பயங்கரவாதத்தை மேற்கு நாடுகளும், ஜனநாயக உலகும் சகித்துக்கொள்ளாது என்பதை தெரிந்து கொண்டிருக்கும் கே.பி. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் அரசியல் மற்றும் ஜனநாயக வழியில் இருக்கும் என்று அறிவித்திருந்தார். இடம்பெயர்ந்த அரசாங்கத்திற்கான வேலைகளில் தமது அமைப்பு ஈடுபடும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய ஒன்று எங்கும் இல்லை என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
தினக்குரல்

No comments:

Post a Comment