சேறு பூசும் இணையத்தளங்கள்ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மீது அரசியல் நோக்கில் சேறு பூசுவதற்காகவே அவர் குறித்த திரிபுபடுத்தப்பட்ட படங்களை சில தமிழ் செய்தி இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளதாக ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார். அவரின் மீது வவுனியா நிவாரணக் கிராமத்தில் வைத்து சேற்றினாலும் கற்களினாலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் செய்தியும் புகைப்படமும் பொய்யானவை என்பது உறுதியாகியுள்ளதாகவும் அவர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
பிரான்ஸில் இருந்து இயக்கப்படும் லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் அடங்க லான சில இணையத்தளங்களில் நாமல் ராஜபக்ஷ மீது சேறு பூசப்பட்ட படமும் செய்தியும் வெளியிடப்பட்டிருந்தன. 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்ள்டன் சுப்பர் குறோஸ் போட்டியின்போது அவரின்மீது சேறுபட்டது.
அந்தப் படத்தை கணனியில் மாற்றியமைத்து திரிபுபடுத்தியவாறு மேற்படி இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனிதாபிமான நடவடிக்கையின்போது புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். ஆனால், அதற்கு ஓரிரு தினங்களின் பின்னர் தான் இறந்ததாக வெளியிடப்பட்ட பத்திரிகையொன்றையும் இறந்த சடலத்தைக் காட்டும் தொலைக்காட்சி செய்தியொன்றையும் பார்ப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டன ஏற்கனவே பிடிக்கப்பட்ட புகைப்படமொன்றை மாற்றியே இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருந்தது பின்னர் உறுதி செய்யப் பட்டது. இதே போன்றே, நாமல் ராஜபக்ஷ மீது சேறு வீசப்பட்டதாக திரிபுபடுத்தப்பட்ட பொய்யான படங்களை இந்த இணையத்தளங்கள் வெளியிட்டிருந்தன. இத்தகைய ஊடக நிறுவனங்கள் குறித்து வெட்கப்படுகிறோம் என்றார். – தினகரன்
No comments:
Post a Comment