24 July 2009

பெரும்பான்மையின மக்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும் ஏனைய சமூகத்தினருக்கும் கிடைக்க வேண்டும் - மஹிந்த சமரசிங்க

இலங்கையில் வாழும் பெரும்பான்மையின மக்களுக்குக் கிடைக்கும் உரிமைகளும் சலுகைகளும் ஏனைய சிறுபான்மை சமூகத்தினருக்கும் கிடைக்க வேண்டும். இதனை மறுக்கும் போதுதான் ஏனைய சமூகத்திலுள்ளவர்கள் அவர்களின் உரிமைகளைப் பெற துவக்கு ஏந்தும் நிலை உருவாகின்றதென இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க பண்டாரவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

கடந்த 30 வருடகால யுத்தம் முடிவடைந்தாலும் எமது நாட்டு பிரஜைகளே எமது நாட்டின் அகதி முகாமில் வாழும் துர்ப்பாக்கிய நிலை. சுமார் 3 இலட்சம் பேர் அகதிகளாக வாழ்கின்றனர். இவர்களை மீளக் குடியமர்த்துவதற்கு அரசும் வெளிநாடுகளும் கூடிய கவனம் செலுத்தி வருகின்றது. யுத்த பூமியிலிருந்து நிலக் கண்ணிகளை அகற்றும் பணிக்கு பல நாடுகள் முன்வந்துள்ளன. எமது ஜனாதிபதிக்கு எதிராக குரல் கொடுத்த நாடுகள் கூட இன்று இலங்கைக்கு உதவி புரிய முன் வந்துள்ளன.

இன்று அரச உத்தியோகத்தர்களில் சிலருக்கு இரண்டாம் மொழியான தமிழ்மொழி தெரிவதில்லை. அதிகமாக தமிழ் பேசுபவர் இருக்கும் பகுதிகளில் தமிழ் தெரிந்த உத்தியோகத்தர்கள் இல்hவிட்டால் எங்கே மனித உரிமை இருக்கப் போகின்றது. இதனால் தான் பிரச்சினையே உருவாகிறது. இதனை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் டியூ குணசேகர மேற்கொண்டு வருகிறார்;. பண்டாரவளையில் 75 வீதமான தமிழ்பேசும் மக்கள் இருக்கின்ற போதிலும் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தனது தாய் மொழியில் முறைப்பாடு செய்யலாமா? தமிழ் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் எத்தனை பேர் உள்ளனர். இது தான் இன்றைய நிலை. எனவே, எதிர்வரும் காலங்களில் தமிழ் தெரிந்தவர்களுக்குத்தான் தொழில் வாய்ப்புண்டு. இதற்கான சுற்றறிக்கை விரைவில் வெளியாகும். இந்த நாட்டில சிங்களவர்களுக்கு கிடைக்கின்ற அனைத்து வளங்களும் உரிமைகளும் ஏனைய இனங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றார்

No comments:

Post a Comment