அங்கீகாரமின்றி கிழக்கில் காணி பகிர்ந்தளிப்பு
கந்தளாய் பிரதேசத்திலுள்ள அரச காடுகள் மாகாண சபையின் அங்கீகாரமின்றி வெளியாருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாகவும் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் சந்திரகாந்தன்; கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசு நிலம் மாகாண சபையின் அங்கீகாரம் பெறாமல் தனியார் கம்பனிகளுக்கு மத்திய அரசாங்கத்தினால் பகிர்ந்தளிப்பது குறித்து எதிர்காலத்தில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பேசுகையில் கிழக்கு மாகாணத்தில் காணிகள் தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்படுவது மாகாணத்தில் வாழும் சகல இன மக்களையும் புண்படுத்துவதாக அமைகின்றது. அதிகார சக்தி இதில் தலையீடு செய்கின்றது. கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினை முக்கியமானதொன்றாகும்.
ஏனைய மாகாணங்களிலும் பார்க்க கிழக்கு மாகாணத்தில் தான் காணிப் பங்கீடு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மற்றும் கிழக்கு மாகாணத்தின் அனைத்து இன மக்களின் மனங்களைப் புண்படுத்துவதாக அமைகிறது. வாழைத்தோட்டச் செய்கைக்காக கந்தளாயில் ஆயிரக் கணக்கான நிலம் தனியார் கம்பனிக்கு வழங்கப்படுகிறது. ஒரு சில அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சிலர் ஊடாக இம் முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து தனது அதிகாரிகளை கேட்டபோது அது அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படாத முறையில் இது அமுல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இது பற்றிய விளக்கம் கேட்டு உரியவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் பதில் கிடைத்ததும் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டு பதினைந்து மாதங்களாகின்றன. மக்களைத் திருப்திப்படுத்தவே கிழக்கு மாகாண சபை உருவானது.ஆனால், மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்கான காலம் கனியவில்லை. மத்திய அரசு மற்றும் அமைச்சுகளின் குறுக்கீடுகள் தொடர்பாக எதிர்காலத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் அதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். அரசமைப்புச் சட்டத்திருத்தம் 13, அதற்கு அப்பால் எதுவாக இருந்தாலும் இருப்பினும், எமது நிலை துக்ககரமானதாகவே உள்ளது. அபகரிக்கப்பட்ட நிலங்கள் பற்றிய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலம் கந்தளாயில் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தில் சுற்றுப் புறச் சூழல் பாதிப்படையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எமது மாகாணத்தில் உரித்துடையவர்களுக்கு ஒரு 20 பேர்ச்சஸ் நிலம் வழங்குவது தொடர்பான மாகாண சபையின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது
No comments:
Post a Comment