உங்களின் புதிர்களுக்கு வரதரின் விடைகள்அன்பார்ந்த நண்பர்களே ஆற்றல் மிகு தோழர்களே!
புலிகள் அழிக்கப்பட்டு விட்டதைத் தொடர்ந்து புலி ஆதரவாளர்களிடமும் ஏனையோர்களில் ஒரு பகுதியினரிடமும் ஒரு கேள்வி குழப்பமான கேள்வி எழுந்துள்ளது. இது புலியை வைத்து பிழைப்பு நடத்தி வந்த பிரமுகர்கள் தமது ஏமாற்றுத் தொழிலை தொடர்ந்தும் தமிழ் மக்கள் மத்தியில் வைத்திருப்பதற்காக மேற்கொண்டுள்ள திட்டமிட்ட பிரச்சாரத்தின் விளைவான ஒரு குழப்பம்தான். எனினும் இந்தக் குழப்பம் பரவலாக பலரிடமும் உண்மையாகவே உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
குழப்பம்
பிரபாகரன் உட்பட புலிகளின் தலைவர்கள் அழிக்கப்பட்டு விட்டதால் தமிழர்கள் மத்தியில் ஒரு தலைமை இடைவெளி (லேஅதேர்ஷிப்Vaccum) ஏற்பட்டிருக்கின்றது. அதை இனி யாரால் நிறைவு செய்யமுடியும்?
இந்தக் குழப்பத்தில் அகப்பட்டுப் போயிருக்கும் உண்மையானவர்களை தெளிவுபடச் செய்வது ஒரு சமூகக் கடமையாகும்.
தெளிவு விளக்கம் :-
முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்! புலிகள் எந்தவொரு கட்டத்திலும் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுமல்ல. புலிகள் எந்த வேளையிலும் பரந்துபட்ட தமிழ் மக்களின்; நலன்களைப் பிரதிநிதிப்படுத்தியவர்களுமல்ல. இன்னும் சொல்லப்போனால்,
தமிழர்களை ஏமாற்றி இலங்கைத் தமிழ் சமுதாயத்தையே சீரழித்த ஒரு மக்கள் விரோதக் கூட்டம்தான் புலிகள். தமிழர்களின்; துன்பங்களையும் துயரங்களையும் தமிழர்களுக்கே வியாபாரம் பண்ணி காசாக்கியது. தமிழர்களின் அபிலாஷைகளை அவ்வப்போது வெளிநாடுகளுடனும் சிறி லங்கா அரசுடனும் பேரம் பேசி ஆயிரக்கணக்கில் ஆயுதங்களையும் கோடிக்கணக்கில்; டொலர்களையும்; பெற்றது. தமது சண்டித்தன ஆட்சியை நிலை நாட்டுவதற்காக பல்லாயிரக்கணக்கான அப்பாவி இளைஞர்களை அநாவசியமாக பலி கொடுத்தது பின்னர் அவற்றை வைத்து புகழ் சம்பாதித்தது பால் கொடுத்து வளர்த்த தமிழர்களையே கொத்தி தமது அடக்குமுறை ஆட்சியை நிலைநாட்டியது. இவற்றில்தானே புலிகள் அக்கறை காட்டினார்கள். இந்த விடயங்களை வரிசைப்படுத்தி நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றில்லை. புலிகளின் கடந்த காலத்தை நீங்களே தொகுத்து சிந்தித்துப் பாருங்கள்!
முழுமை http://www.sooddram.com/Articles/VP/QuestionAnsw/July062009.htm
No comments:
Post a Comment