23 July 2009

மீளக் குடியமர்த்துவதில் இந்தியா அதிக கவனம்இந்திய-இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பில்

தாய்லாந்து புகாட் நகரில் நடைபெற்று வரும் ஆசிய வெளிவிகார அமைச்சர்கள் மாநாட்டில் கொள்ளும் இந்திய-இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சந்திப்பின் போது இடம்பெயர்ந்த 300000 தமிழ் மக்களை மீளக் குடியமர்த்துவதில் குறித்து அதிக கவனம் செலுத்துமாறு தாம் கோரியதாக எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளதாகவும் இடம் பெயர்ந்த மக்கள் தொடர்பில் இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதி மொழியைப் போன்று 180 நாட்களில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அம் மக்கள் குடியமர்த்த தேவையான சகல உதவிகளையும் வழங்க தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
.

No comments:

Post a Comment