பட்டதாரிகளின் போராட்டம் குறித்து விவாதம்
நேற்று திருகோணமலையில் கிழக்கு மாகாண சபையின் அமர்வின் போது மாகாணசபை உறுப்பினர் அப்துல் ரசாக் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்பபு வழங்க வேண்டும் என கோரும் பிரேரiணை முன்வைத்த் போது ஏனைய மாகாணசபை உறுப்பினர்கள் உரையாற்றும் போது மட்டக்களப்பில் கடந்த 21 நாட்களாக வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம் குறித்து உரையாற்றினர். இவர்களின் உரைக்கு பதிலளி;த்த ஆளும் தரப்பு வேலைவாய்ப்பு வழங்க மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை எனவும் அதற்குரிய நிதியும் இல்லையெனவும் தெரிவித்தனர். வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றதைத் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றியுள்ளவர்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மாகாண அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் உள்ளடக்கிய எட்டுப் பேர் கொண்ட குழு முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையில் நியமிக்கப்பட்டது. இக் குழுவினர் அடுத்த மாதம் 25 ஆம் திகதி மீண்டும் சபை கூடும் போது தமது அறிக்கையை சபையில் முன் வைப்பார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.
No comments:
Post a Comment