இலங்கையில் ஆட்சி செய்யும் அரசுகள் தமிழ் மக்களுக்கு எதிராகவே நடக்கின்றன
இலங்கையில் ஆட்சி செய்யும் அரசுகள் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் பாரபட்சமாகவே நடந்து வருகின்றதாகத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி அதனை உலக நாடுகள் கண்காணிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், மக்கள் சிவில் உரிமைகள் கழகம் (பி.யு.சி.எல்). என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இலங்கை பிரச்சினை குறித்து இந்த அமைப்பின் சார்பில் கிருஷ்ணய்யர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கையில் ஆட்சி செய்யும் அரசுகள், தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து பாரபட்சமாகவே நடந்து வருகின்றன. மறுபுறத்தில் விடுதலைப்புலிகளின் தீவிரவாத செயல்களால், தமிழர் பிரச்சினை என்றாலே உலக நாடுகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற, இலங்கையில் கூட்டாட்சி முறை ஏற்பட வேண்டும். அடக்கு முறையால் எதையும் சாதிக்க முடியாது என்பதை இலங்கை அரசு உணர வேண்டும். அதனால், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். இதை உலக நாடுகள் கண்காணிக்க வேண்டும்.
நன்றி- தினக்குரல்
No comments:
Post a Comment