புலிகள் நிபந்தனை விதிக்க முடியாது- ஈழம் என்ற மாயை கலைந்து விட்டது - பாலித
புலிகளின் கருத்து குறித்து வெளியுறவுத் துறைச் செயலர் பாலித கோஹன்னாவிடம் கேட்டபோது, அவர் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்கக்கூடிய நிலையில் இப்போது இல்லை என்றார்.
புலிகள் இப்போது தோற்றுவிட்டார்கள். ஈழம் என்ற மாயையும் கலைந்துவிட்டது. புலிகள் இப்போது செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அதாவது மக்களை மனித கேடயமாக பயன்படுத்துவதை விட்டுவிட்டு, தமது ஆயுதங்களை அவர்கள் கீழே போட வேண்டும் அவ்வளவுதான். அவர்கள் ஆயிரக்கணக்கான மக்களை பலவந்தமாக பிடித்து வைத்திருக்கிறார்கள் அவர்களை புலிகள் விடுவிக்க வேண்டும். எவரையும் பலவந்தமாக தடுத்து வைப்பது ஒரு குற்றச் செயல்", என்றார்-
பி.பி.சி
No comments:
Post a Comment