மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் பெறுவது குறித்து ஆராய்வு
மாகாண சபைகளுக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வது குறித்து மட்டக்களப்பில் இன்றும் நாளையும் நடைபெறவிருக்கும் 25வது மாகாண முதலமைச்சர்கள் மாநாட்டில கவனம் செலுத்தப்படும்" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மேலும் மாகாண சபைகளின் அதிகாரங்கள் என்பதை விட மாகாண சபைகளுக்கு 13ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, அதற்கான உதவிகளை இம்மாநாட்டின் மூலம் நாடவிருப்பதாகத் தெரிவித்தார். 13வது அரசியல் திருத்தத்தின்படி அனைத்து மாகாணங்களுக்கும் அமுல்படுத்தப்படும் இந்த அதிகாரப் பகிர்வு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் இது தொடர்பான பிரச்சினை இருக்கிறது என்றார். யுத்த சூழ்நிலை முடிவுக்கு வருகின்ற நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வு அதிகாரப் பகிர்வு முக்கிய பிரச்சினையாக அமையும். குறிப்பாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக இம் மாநாட்டில் கவனம் செலுத்தப்படும் என்றார்
No comments:
Post a Comment