பட்டித்தோட்டம் வயோதிபர் இல்லத்தில் 76 பேர்
வன்னியில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களில் 76 வயோதிபர்கள் மன்னார்-தாழ்வுப்பாடு பிரதான வீதியில் உள்ள பட்டித்தோட்டம் வயோதிபர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களில் கண்பார்வை இழந்தவர்கள், நடக்க முடியாதவர்கள் மற்றும் சுகயீனமுற்றவர்கள் ஆகியோர் அடங்குகின்றனர். இதுவரை இவர்களில் 04 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 07 பேர் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி இல்லத்தை நடத்திவரும் அருட். சகோதரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment